நம்பிக்கையில்லா தீர்மானம்: அதிமுக ஆதரவை கோரும் பா.ஜ.க - கருணாநிதி சஸ்பெண்ஸ்; டெல்லிக்கு வைகோ?
டெல்லி:
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நம்பிக்கை இல்லாதீர்மானம் கொண்டு வந்துள்ளன. இதையடுத்து அதிமுகவின் ஆதரவைக் கோர பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.
அதே போல அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மதிமுக எம்.பி. என்ற வகையில் வைகோவையும் ஒரு நாள் சிறையில்இருந்து விடுவித்து டெல்லி அழைத்துச் செல்லவும் பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதா அல்லது ஆதரித்து வாக்களிப்பதா என்பது குறித்துதிமுக இன்னும் முடிவெடுக்கவில்லை என கருணாநிதி கூறியுள்ளார்.
கார்கில் போரின்போது ராணுவத் தளவாடங்கள் வாங்கப்பட்டதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்தியஅரசை எதிர்க் கட்சிகள் தாக்கி வருகின்றன. பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராஜினாமா செய்யவேண்டும் என கோருகின்றன. ஆனால், அதை பிரதமர் வாஜ்பாய் ஏற்க மறுப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம்கொண்டு வந்துள்ளன.
காங்கிரஸ், முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, லாலுவின் ராஷ்டிட்ரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட், ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சி, அஜீத் சிங்கின் கட்சி ஆகியவை இந்தத் தீர்மானத்தைஆதரிக்கவுள்ளன.
மக்களவையில் போதிய பலம் இருந்தாலும் மாநிலங்களவையில் பா.ஜ.க. கூட்டணிக்கு பலமில்லை. இதனால்நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க முடிந்தவரை பிற கட்சிகளின் ஆதரவைத் திரட்டுவதில் பா.ஜ.க.தீவிரமாக இறங்கியுள்ளது.
அதிமுக, மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் பெற முயற்சி நடக்கிறது. இந்தப் பொறுப்புதுணைப் பிரதமர் அத்வானி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்வானி சொன்னால் முதல்வர் ஜெயலலிதா கேட்பார் என்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது மத்தியஅரசுக்கு ஆதரவாக அதிமுக வாக்களிக்கும் என்று தெரிகிறது. ஆனால், அதிமுக ஆதரவு தேவையென்றால்நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின் திமுக, மதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவோம் என்றஉறுதிமொழி தரப்பட வேண்டும் என ஜெயலலிதா தரப்பில் இருந்து நிபந்தனை விதிக்கப்படலாம் வரலாம் எனவும்பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.
இதனால் அதிமுகவின் ஆதரவைத் திரட்ட, ஆன்மீகத் தலைவர் ஒருவரின் உதவியும் நாடப்படும் என்று தெரிகிறது.
ஆனால், தங்களை கூட்டணியில் வைத்துக் கொண்டு ஜெயலலிதாவுடன் பா.ஜ.க தலைவர்கள் பேசுவதை திமுக,மதிமுக ஆகிய கட்சிகளும் எதிர்க்கும் என்றும் தெரிகிறது. இதையடுத்து திமுக, மதிமுக உள்ளிட்ட தேசியஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் கூட்டியுள்ளார். இக் கூட்டம்திங்கள்கிழமை நடக்கிறது.
அதில தனது நிலையை பிரதமர் வாஜ்பாய் விளக்குவார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியுடன் வாஜ்பாயேதொலைபேசியில் பேசுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளின் தலைவர்களிடன் பிரதமர்வாஜ்பாய் ஆலோசனை நடத்தினார். பிரதமர் இல்லத்தில் நடந்த இக் கூட்டத்தில் துணைப் பிரதமர் அத்வானி, சமதாகட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், திமுக மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, பிஜூ ஜனதா தளத்தின் திரிபாதி,தேசிய லோக் தள் கட்சியின் அஜய் செளதாலா, அகாலி தளத்தின் தின்ஸா, சிவ சேனையின் சந்திரகாந்த் கைரேஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் அனைத்து தேசிய ஜனநாயகக் கட்சியின் எம்.பிக்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போதுநாடாளுமன்றத்துக்கு வர வேண்டும், அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதி தான் முடிவெடுக்கமுடியும் என பாலு தெரிவித்துவிட்டார்.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், தீர்மானத்தை முறியடிக்க அதிமுகவின்ஆதரவு நிச்சயம் கோரப்படும். அதே போல மதிமுக தலைவர் வைகோவை சிறையில் இருந்து டெல்லிக்குஅழைத்துச் சென்று வாக்கெடுப்பில் பங்கேற்கச் செய்யவும் யோசித்து வருகிறோம் என்றார்.
ஆனால், இதை வைகோ ஏற்பாரா என்று தெரியவில்லை.
இந் நிலையில் இன்று தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையா என்றுஇன்னும் திமுக முடிவு செய்யவில்லை. இதில் நான் எந்த முடிவையும் எடுக்க முடியாது. கட்சியின் செயற்குழு தான்விவாதித்து முடிவெடுக்கும் என்றார். இதனால் கடைசி நேரம் வரை பா.ஜ.கவை சஸ்பெண்சில் வைக்க கருணாநிதிமுடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
திங்கள்கிழமை இந்த நம்பிக்யிைல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. செவ்வாய்க்கிழமைஇரவில் ஓட்டெடுப்பு நடக்கும் என்று தெரிகிறது.
இதை ஒரு சவாலாகவே பா.ஜ.க. எடுத்துக் கொண்டுள்ளது. கூட்டணியில் இருந்தாலும் திமுக, மதிமுக, திரிணமூல்காங்கிரஸ் ஆகிய கட்சிகளை அதிருப்தியுடன் இருப்பதால் ஒருவித கலக்கத்துடனேயே இந்த நம்பிக்கை இல்லாதீர்மானத்தை பா.ஜ.க. அரசு சந்திக்கிறது.
இதற்கிடையே இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவைத் திரட்ட காங்கிரசும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது.சோனியாவுடனான மோதலால் விலகி நிற்கும் சரத்பவாரின் கட்சி இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இவை தவிர மேலும் பல சிறிய கட்சிகள், சுயேச்சைகளை வளைப்பதில் பா.ஜ.கவும் காங்கிரசும் களமிறங்கியுள்ளன.
அதிமுகவைச் சேர்க்காமலேயே தங்களுக்கு 323 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதாக பா.ஜ.க. தலைமைக் கொறடாமல்ஹோத்ரா கூறியுள்ளார்.


