ஆந்திரா: வேன் கிணற்றில் விழுந்து 14 குழந்தைகள் பலி
ஹைதராபாத்:
ஆந்திர மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகள் சென்ற வேன் சாலையோர கிணற்றில் விழுந்ததில் 14 குழந்தைகள்பலியாயினர். 24 பேர் படுகாயமடைந்தனர்.
கரீம்நகர் மாவட்டம் தேஷ்ராஜ்பள்ளி என்ற கிராமத்தில் இந்த சோகமான சம்பவம் இன்று காலை நடந்தது.
இந்த ஊரில் உள்ள மாதா நர்சரிப் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றிக் கொண்டு அந்த வேன் சென்றது. காலை 9.20மணியளவில் கிணற்றருகே சென்றபோது சாலையில் இருந்து தடுமாறி தடுப்புச் சுவர் ஏதும் இல்லாத அந்தக்கிணற்றுக்குள் விழுந்தது.
இதில் 14 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்தனர். இதுவரை 10 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும்24 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர்.
கிராமப் புறங்களில் சாலைகளின் இரு பக்கமும் விவசாயக் கிணறுகள் இருப்பது வழக்கம். இவற்றுக்கு சுற்றுச் சுவர்இருக்காது. இதே போன்ற ஒரு சம்பவம் திண்டிவனம் அருகிலும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்ததும் அதில்10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.


