பாஜகவுடன் இருந்தாலும் மதச்சார்பற்ற கட்சி திமுக: சுலைமான் சேட்
சென்னை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணியில் திமுகவும்இடம் பெறும் என்று நம்புவதாக இந்திய தேசியலீக் கட்சியின் தலைவர் இப்ராகிம் சுலைமான் சேட் கூறினார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பாணியில் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவும் செயல்பட ஆரம்பித்திருக்கிறார். பொது சிவில் சட்டம், ராமர் கோவில் கட்டுவது எனபா.ஜ.க. வழியில் போக ஆரம்பித்துவிட்டார். வரும் தேர்தலில் அவர் ஆட்சியை இழப்பது நிச்சயம்.
பா.ஜ.க. கூட்டணியை விட்டு உடனடியாக திமுக வெளியேற வேண்டும். மதவாத பா.ஜ.க. வரும் தேர்தலில்தோற்கடிக்கப்படும். அந்த தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டணியில் திமுகவும் இடம்பெறும் என்பது என்அசைக்க முடியாத நம்பிக்கை.
இதுவரை பா.ஜ.கவுடன் இருந்தாலும் கூட நாட்டின் மதசார்பற்ற கட்சிகளில் மிக முக்கியமானது திமுக என்றார்.












Click it and Unblock the Notifications