குடிக்க தண்ணீர் கூட தரவில்லை போலீஸ்: செரீனா
மதுரை:
திருச்சி சிறையிலிருந்து மதுரைக்கு அழைத்து வரும்போது குடிக்கத் தண்ணீரோ, சாப்பாடோ கூட தராமல்போலீஸார் கொடுமைப்படுத்துவதாக மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் செரீனாவின்வக்கீல் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து பதில் தருமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஞ்சா கடத்தியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள நடராஜனின் தோழி செரீனா, அவரது தாயார் ரெஜீனாஆகியோர் திருச்சி சிறையிலும், அவர்களது கார் டிரைவர் சதீஷ் சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது சிறைக் காவல் இன்றுடன் முடிவடைவதால் 3 பேரும் இன்று காலை மதுரை போதைப்பொருள் தடுப்புசிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களது காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதிசந்திரகுமார் உத்தரவிட்டார்.
அப்போது செரீனாவின் வழக்கறிஞர் சங்கரபாண்டியன் நீதிபதியிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தார். அதில்,
திருச்சி சிறையிலிருந்து மதுரை நீதிமன்றத்திற்குக் கொண்டு வரும் வரை, செரீனாவுக்கும், அவரது தாயாருக்கும்போலீஸார் குடிக்க தண்ணீர் கூட தருவதில்லை, சாப்பாடும் தருவதில்லை. சுமார் 3 மணி நேர பயணத்தின்போதுகுடிநீர் கூட இல்லாமல் அவர்கள் கொண்டு வரப்படுகிறார்கள்.
மேலும், நீதிமன்ற மாடிப் படிகளில் அவர்களை தரதரவென இழுத்து வருகிறார்கள். கூட்டநெரிசலைக் காரணம்காட்டி இவ்வாறு செய்வதாக போலீஸார் கூறினாலும், வேண்டும் என்றேதான் இப்படிச் செய்கிறார்கள்.
இதற்கான வீடியோ ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார்.
இந்தப் புகார்கள் குறித்து வரும் 25ம் தேதிக்குள் பதில் தருமாறு போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின்னர் செரீனா உள்ளிட்ட 3 பேரும் மீண்டும் சிறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


