வைத்தீஸ்வரன் கோவில் யானைக்கு மீண்டும் மதம் பிடித்தது
சீர்காழி:
நாகப்பட்டனம் மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் யானைக்கு மீண்டும்மதம் பிடித்துள்ளது.
வைத்தீஸ்வரன் கோவில் யானையான தையல்நாயகிக்கு ஏற்கனவே ஒரு முறை மதம் பிடித்துள்ளது. இந் நிலையில்வியாழக்கிழமை இரவு மீண்டும் மதம் பிடித்தது.
கோவிலின் தீர்த்தவாரி மண்டபத்தில் இந்க யானை கட்டி வைக்கப்பட்டிருந்தது. யானைப் பாகன் சீனிவாசன்என்பவரும் அங்கேயே தங்கியிருந்தார்.
இந் நிலையில், இரவு 9.30 மணியளவில் யானைக்கு மதம் பிடித்தது. முரட்டுத்தனமாக நடந்து கொண்டது.இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மிகப் பெரிய சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த அந்த யானைக்கு துப்பாக்கி மூலம் ஊசி போடப்பட்டது. இந்தஊசி போடப்பட்டவுடன் யானை மிகுந்த ஆவேசத்துடன் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு ஓடியது.
வெறியுடன் பாகனை விரட்ட ஆரம்பித்து. அவர் தீர்த்தவாரி மண்டபத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடினார்.
இறுதியில் மண்டபக் கதவுகளையும் உடைத்துக் கொண்டு யானை கோவிலுக்குள் புகுந்தது.
அங்கிருந்த பிரசாதக் கடைகள், மரப் பெட்டிகளை தூக்கிப் போட்டு உடைத்தது. தையல்நாயகி அம்மன் கோவில்உண்டியலையும் உடைத்தது.
இந் நிலையில் உடலில் செலுத்தப்பட்ட மருந்து வேலை பார்க்க ஆரம்பிக்கவே, அதிகாலை 3 மணியளவில்மயக்கமடைந்து கீழே விழுந்தது. இதன் பின்னர் யானை மிகவும் பலமான சங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டுள்ளது.


