மிரட்டல்களை மீறி தா.கியின் கோட்டைக்குள் நுழைந்த கருணாநிதி
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுகவினரின் கார்கள், தங்கள் பகுதியை கடந்து போகக் கூடாது என்றுமுன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணனின் ஆதரவாளர்கள் கூறியதால், மானாமதுரை அருகே பெரும் பரபரப்புஏற்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மதுரை மற்றும் பரமக்குடியில் தேர்தல் நிதியளிப்புக் கூட்டங்களில் கலந்துகொண்டார்.
பரமக்குடிக்கு கருணாநிதி வரக் கூடாது, அப்படியே வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தா.கியின்ஆதரவாளர்களும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தினரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு அதிமுகவும்பின்னணியில் நிற்க பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதையடுத்து சிவங்கை மாவட்ட திமுகவினர் கருணாநிதியைச் சந்தித்து நிலைமையை விளக்கினர். போலீசாரின்முழு பாதுகாப்பு கிடைப்பது கடினமே என அச்சம் தெரிவித்த அவர்கள், தாங்கள் முழு பாதுகாப்பு அளிப்பதாகக்கூறினர்.
ஒருவேளை தா.கியின் ஊர் அருகே கருணாநிதியின் காரை போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பவும்வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்தனர்.
என்ன ஆனாலும் சரி, நான் பரமக்குடிக்குச் செல்வேன், திட்டமிட்ட வழியில் தான் செல்வேன், யார் தடுத்தாலும்அதை சந்திப்போம் என்று கூறிவிட்டார் கருணாநிதி. இதனால் பரபரப்பு மேலும் கூடியது.
இதையடுத்து நேற்று மாலை மதுரை வந்த கருணாநிதி, மாலை 5.45 மணியளவில் பரமக்குடிக்கு கிளம்பினார்.அவருடன் ஏராளமான கார்களில் திமுகவினரும் உடன் சென்றனர்.
கார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சென்றபோது, தா.கியின் ஆதரவாளர்களும், மூவேந்தர்முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் ஏராளமான அளவில் திரண்டிருந்தனர்.
அதேபோல திமுகவினரும் ஏராளமாகக் குவியவே டென்சன் பற்றிக் கொண்டது. பெரும் பரபரப்பான சூழ்நிலைநிலவியது. அசம்பாவிதம் நடக்க முழு வாய்ப்பு இருப்பதால் போலீஸார் பெரும் அளவில் குவிக்கப்பட்டனர்.ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதனால் மோதல் ஏதும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கட்டிக்குளம் என்ற இடத்தில் திமுகவினரின்கார்கள் மீது சிலர் கல் வீசிவிட்டு ஓடிவிட்டனர்.
கருணாநிதியின் வருகையை ஒட்டி தா.கியின் சொந்த ஊரான கொம்புக்கரனேந்தல் மற்றும் முத்தனேந்தல் உள்படமாவட்டத்தின் சென்சிட்டிவான அனைத்து இடங்களிலும் ஆயுதப் படை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


