மும்பையில் 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 42 பேர் பலி
மும்பை:
மும்பையில் இன்று பகலில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 42 பேர் பலியாயினர்.சுமார் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கேட் வே ஆப் இந்தியா மற்றும் மும்பாதேவி அருகே உள்ள தன்ஜி பஜார் தெரு ஆகிய இடங்களில் இந்தக்குண்டுகள் வெடித்தன.
முதல் குண்டு கேட் வே ஆப் இந்தியா அருகே வெடித்தது. இந்த வெடிப்பின் சத்தம் சுமார் 2 கி.மீ. தொலைவுக்குக்கேட்டது. இங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு அம்பாசிடர் காரில் அந்த குண்டு வைக்கப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் இன்னொரு குண்டு தன்ஜி பஜார் பகுதியில் வெடித்தது. இங்கும் ஒரு காரில் தான் குண்டுவைக்கப்பட்டிருந்தது. இந்த இரு வெடிப்புகளிலும் 42 பேர் பலியாயினர். 150க்கும் மேற்பட்டவர்கள்படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுகள் வெடிப்பதற்கு முன் பகல் 1.10 மணியளவில் மும்பாதேவி கோவில் அருகே ஒரு தெருவில் உள்ளகட்டடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது. இது குண்டு இல்லை எனவும், சமையல் கேஸ் வெடிப்பு என்றும் தெரியவந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்புகளையடுத்து மகாராஷ்டிரா முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியஇடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மும்பை நகரம் தயாராகி வரும்நிலையில் இந்த குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.
குண்டுகள் வெடித்த தகவல் பரவியுடன் அது தொடர்பான புரளிகள் பரவுவதைத் தடுக்க மாநிலம் முழுவதும்தொலைபேசி மற்றும் செல்போன் சேவைகள் போலீசாரால் முடக்கப்பட்டுவிட்டன. இதனால் ஒருவரை ஒருவர்தொடர்பு கொள்ள முடியாத மிகக் குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புகள் நடந்த இடம் குஜராத்திகள் நிறைந்த இடமாகும். இதனால் குஜராத்திலும் மிக பலத்தபாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்புகளை அடுத்து மும்பை பங்கு சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பல பங்குகளின்விலைகள் மடமடவென சரிந்தன.
குண்டுகள் இரண்டுமே மிக சக்தி வாய்ந்தவையாக இருந்ததால் இவை செட்மேக்ஸ் அல்லது ஆர்.டி.எக்ஸ்.வகையைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உலக அளவில் தீவிரவாதிகள் பயன்படுத்திவரும் மிக பயங்கரமான வகை குண்டுகள் இவை. குண்டுகளின் வகை குறித்து ஆய்வு செய்ய ராணுவத்தின்உதவியை மாநில அரசு நாடியுள்ளது.
கடந்த 6 மாதங்களில் மும்பையில் நடந்துள்ள 9வது குண்டுவெடிப்பு இது.


