For Quick Alerts
For Daily Alerts
Just In
கோக், பெப்சிக்கு ஆதரவாக போராட்டம்!!
சென்னை:
நச்சுக் கலந்துள்ளதாகக் கூறி கோக், பெப்சி உள்ளிட்ட குளிர் பானங்களுக்கு எதிராக நாடு முழுவதிலும்போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், சென்னையில் இன்று கோக், பெப்சிக்கு ஆதரவாக போராட்டம்நடந்தது.
தமிழக நுகர்வோர் பாதுகாப்புக் குழு என்ற அமைப்பின் சார்பில் சென்னையில் இந்தப் போராட்டம் நடந்தது.
கோக், பெப்சி உள்ளிட்ட குளிர் பானங்களில் நச்சு கலக்கவில்லை என்று பிரசாரம் செய்யப்பட்டது. மேலும், கோக்,பெப்சி குளிர் பானங்களைக் குடித்துக் காட்டியும் பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனர்.
அந்தப் பகுதியில் வருகிற, போகிறவர்களுக்கு இலவசமாக இந்த குளிர் பானங்கள் கொடுக்கப்பட்டன.நம்மவர்களும் வாங்கி அடித்தனர்.


