தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்: காஞ்சி மடம், முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு
சென்னை:
மும்பையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் நேற்று இரண்டு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்களில் 49 பேர் இறந்தனர்.நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பஸ்நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், முக்கிய நினைவிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி மடத்திற்கும் ஆயுத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மடத்திற்குவருவோரிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை உள்ளிட்ட மதரீதியில் சென்சிட்டிவான தமிழகத்தின் சில பகுதிகளிலும் உளவுப் பிரிவு போலீசாரின்கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.


