For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு மாறுகிறது தலைமைச் செயலகம்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இப்போது புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தை கிண்டியில் உள்ள அண்ணாபல்கலைக்கழக வளாகத்துக்கு மாற்ற முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தலைமைச் செயலகத்தைக் கட்ட மீனவர் குப்பங்களை அகற்றும் முயற்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதே ராணிமேரிக் கல்லூரியை இடித்துவிட்டு அங்கு தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியும் நீதிமன்றச் சிக்கலில்மாட்டியுள்ளது.

இந் நிலையில் மகாபலிபுரம் சாலையில் தலைைமச் செயலகம் கட்டும் பணிகள் இப்போது ஆரம்பித்தாலும்நிறைவடைய பல ஆண்டுகள் ஆகிவிடும். அதுவரை சமாதிகளைத் தாண்டி தலைமைச் செயலகத்தை அடையமுதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிகிறது.

இதனால் அதை அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு தலைமைச் செயலகத்தை மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.இங்குள்ள 35 ஏக்கர் நிலத்தில் தலைமைச் செயலகத்தைக் கட்டுவது குறித்து நேற்று நடந்த அமைச்சரவைக்கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ராணி மேரிக் கல்லூரி விஷயத்தில் மாட்டிக் கொண்டது மாதிரி ஏதும் நேர்ந்துவிடாமல் தவிர்க்க அண்ணாபல்கலைக்கழகத்தின் செயல்பாட்டு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ளவும் அரதுதீர்மானித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எந்த இடைஞ்சலும் தருவதில்லை. அதே நேரத்தில் அங்கு இயங்கி வரும்தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குனரகம் உள்ளிட்ட சில அலுவலகங்களை மட்டும் அங்கிருந்து தரமணிக்குமாற்றிவிடுவது என்று அரசு முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தலைமைச் செயலகத்தை மாற்றும் இந்த விஷயம் மிகவும் ரகசியமாகவேவைக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் 6 நாள் வேலையைஅமல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.

நீண்ட நேரம் நடந்த இக் கூட்டத்தின்போது, அரசு ஊழியர்களுக்கு 6 நாள் வேலையை அமல்படுத்துவது,விடுமுறை நாட்களைக் குறைப்பது, புதிய தலைமைச் செயலக கட்டிடம் குறித்து விவாதிக்கப்பட்டது.

தலைமைச் செயலக ஊழியர்களை இடமாற்றம் செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முக்கியமாகஓய்வு பெறும் வயதைக் குறைப்பது குறித்து விவரமாகவே ஆலோசிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X