தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் குதிக்கும் விஜயசாந்தி
சென்னை:
ஆந்திர மாநிலம், தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான தனி மாநிலக் கோரிக்கைப்போராட்டத்தை முன்னின்று நடத்த நடிகை விஜயசாந்தி முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வர்ஜெயலலிதாவுடன் தீவிரமாக நேற்று விவாதித்தார்.
அதிரடிப் படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை விஜயசாந்திக்கு இப்போது ஆந்திரத் திரையுலகில் மார்க்கெட்போய் விட்டது.
இதையடுத்து வழக்கமாக பிரபல நடிகர், நடிகையர் செய்வது போல இவரும் அரசியலில் குதித்தார். பா.ஜ.கவில்சேர்ந்தார். இப்போது தனிக் கட்சி ஆசை வந்துவிட்டது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள தெலுங்கானா பகுதி மக்கள் நீண்ட காலமாக தனி மாநிலம் கோரி வருகின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக நக்சலைட்டுகளும் போராடி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கையை பலமாக ஆதரிப்பதன் மூலம் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக நேரடியாகக்களத்தில் குதிக்கப் போகிறார் விஜயசாந்தி. இதன் மூலம் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கவும் அவர்முடிவெடுத்துள்ளார்.
தனது முயற்சிகளுக்கு ஆதரவு கோரியும், தீவிர அரசியலில் குதிக்க அறிவுரைகள் பெறவுமே முதல்வர்ஜெயலலிதாவை விஜயசாந்தி நேற்று சந்தித்துள்ளார்.


