For Daily Alerts
Just In
திருமண கோஷ்டி சென்ற வேன் - பஸ் மோதல்: 2 பேர் பலி, 16 பேருக்கு கை போனது
கோபிசெட்டிப்பாளையம்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே திருமண கோஷ்டியினர் சென்ற வேன் மீது, தனியார்பேருந்து மோதியதில் 2 பேர் பலியாயினர். 16 பேருக்கு கைகள் துண்டாயின
கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடியேறி என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமணம்முடிந்த பின் மணமக்கள் உள்ளிட்டோர் வேன் மூலம் திருப்பூர் கிளம்பினர்.
இந்த வேன், மொடச்சூர் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து பயங்கர வேகத்தில்மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 16 பேருக்கு கைகள் துண்டிக்கப்பட்டன.
மணமக்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
கைகள் இழந்தவர்களும், காயமடைந்தவர்களும் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


