பாரிஸ் தடகள போட்டியில் வெண்கலம் வென்ற அஞ்சுவுக்கு ரூ. 25 லட்சம் பரிசு: ஜெ. உத்தரவு
சென்னை:
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில், நீளம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம்வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை அஞ்சு ஜார்ஜுக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படுவதாக முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உலகத் தடகளப் போட்டியில், நீளம் தாண்டுதல் பிரிவில்வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் அஞ்சு ஜார்ஜ். இதன் மூலம் இந்திய வீராங்கனைகளிலேயே, தனி ஒரு நபராக,உலக அளவிலான போட்டியில் பதக்கம் வென்றவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அஞ்சு ஜார்ஜ்.
கடந்த 2002ம் ஆண்டு பூசான் நகல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் தங்கப் பதக்கம்வென்றபோது அவரைப் பாராட்டி ரூ. 20 லட்சம் வழங்கினேன். பின்னர் நடந்த காமன்வெல்த் போட்டியில்வெண்கலப் பதக்கம் வென்றபோது அதைப் பாராட்டி ரூ. 10 லட்சம் வழங்கினேன்.
தற்போது உலக தடகளப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்திய விளையாட்டு வீரர்களின்பெருமையை, குறிப்பாக வீராங்கனைகளின் பெருமையை உயர்த்தியுள்ளார் அஞ்சு ஜார்ஜ். அதைப் பாராட்டும்விதமாக அவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
அவரது பயிற்சியாளர் பாபி ஜார்ஜுக்கு ரூ. 3.75 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
2004ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் அஞ்சு ஜார்ஜ் பல்வேறு சாதனைகளை நிகழ்த்த வேண்டும் எனவாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.


