ஐ.ஏ.எஸ்-- பிரிலிமினரி தேர்வில் வென்றவர் ஜனனி!!
மதுரை:
வீட்டிலிருந்த தங்களைக் கஞ்சா கடத்தியதாக கூறி போலீஸார் பொய் வழக்குப் போட்டு கைது செய்துவிட்டதாகவும், தங்களை ஜாமீனில் விடக் கோரியும் மதுரை பெண் ஜனனி மற்றும் அவரது தாயார் ரெஜீனாஆகியோர் மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
தனது அழகை வைத்து போதைப் பொருள் கடத்தியதாக ஜனனியே வாக்குமூலம் தந்ததாகக் கூறி அதைபத்திரிக்கைகளுக்கும் தந்தது தமிழக போலீஸ். ஆனால், அதை நம்பாத பெரும்பாலான பத்திரிக்கைகள், செய்திநிறுவனங்கள் அந்த வாக்குமூலத்தை வெளியிடவே இல்லை.
இந் நிலையில் மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் என்ற ஜனனி மற்றும் அவரது தாயார்ரெஜீனா ஆகியோர் சார்பில் வழக்கறிஞரும் சசிகலாவின் கணவர் நடராஜனின் நெருங்கிய நண்பருமானசங்கரபாண்டியன் புதிய ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை 9ம் தேதி மதுரையில் உள்ள எங்கள் வீட்டில் இருந்த எங்களை கஞ்சா கடத்தியதாக கூறி போலீஸார்கைது செய்து விட்டனர். எங்கள் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு.
காரில் சென்றபோது பிடித்ததாகவும், அப்போது கார் நிறைய கஞ்சா இருந்ததாகவும் பொய்யான வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
நான் சிவில் சர்வீஸ் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) தேர்வின் முதல் கட்டமான பிலிமினரி தேர்வு பாஸ் செய்தவள்.
வரும் அக்டோபர் மாதம் மெயின் தேர்வு நடைபெறவுள்ளது. அதற்காக நான் தயாாராக வேண்டும், தேர்வில்கலந்து கொள்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். எனவே என்னையும், எனது தாயாரையும் ஜாமீனில்விடுவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதேபோல சங்கரபாண்டியன் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், சிவில் சர்வீஸ் தேர்வில் ஜனனி கலந்து கொள்ளவேண்டியுள்ளதால் அவரை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்க வேண்டும். ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டஒருவர் தேர்வில் கலந்து கொள்வதற்காக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுவரை ஜனனி ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வந்தது மட்டுமே வெளியில் தெரிந்தது. பிரிலிமினரி தேர்வில்அவர் வெற்றி பெற்றவர் என்ற விவரமே இப்போது தான் வெளியில் வந்துள்ளது.


