For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விநாயகர் ஊர்வலத்தை தடை செய்ய கிருஷ்ணசாமி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விநாயகர் ஊர்வலத்தையும், விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதையும் தடை செய்ய வேண்டும் என்று புதியதமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுனர், முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,

தமிழ் நாட்டில் பிள்ளையார் சதுர்த்தியை வீட்டளவில் அடக்கமாக கொழுக்கட்டையும் சுண்டல் அவியலும்படையலிட்டு கொண்டாடி வந்தார்கள்.

ஆனால், சமீப காலமாக இந்து அடிப்படைவாதிகள் விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் சிறுபான்மையினஇஸ்லாமியர்களை சீண்டி வருகின்றனர். இன்னல்பட்ட ஏழை, அடித்தள ஜாதியினர் இஸ்லாமிய சமூகத்துக்குமாறினர். இதற்காக பழிவாங்கும் பொருட்டு இஸ்லாமியர்களுக்கு இந்த விழா மூலம் இன்னல் தந்து வருகின்றனமதவாத இயக்கங்கள்.

தமிழ் இறையியல்- பண்பாட்டின்படி எந்த ஒரு தெய்வத்தின் சிலையையும் மண்ணால் செய்வதும் இல்லை. அதைநீர் நிலைகளில் கரைப்பதும் இல்லை. நம் பண்பாடு கற்சிற்பம் தான். அதை நீரில் கரைக்கும் முறை நம்முடையதேஅல்ல. அது மற்றவர்களின் கலாச்சாரம். அதை நாம் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் நாட்டில் மதக் கலவரங்கள் நடந்ததில்லை. ஆனால், இந்த அமைதி மாநிலத்தையும் குஜராத் ஆக்க இந்துஅடிப்படைவாதிகள் முயல்கின்றனர். திருவள்ளுவர், வள்ளலார், அயோத்திதாசர். பெரியார், அண்ணாபோன்றவர்களால் அமைதிப் பூங்காவாக்கப்பட்ட பூமி தமிழகம்.

இப்போது வினாயகர் ஊர்வலம் என்ற பெயரில் மதக் கலரத்தைத் தூண்ட அடிப்படைவாதிகள் முயல்கின்றனர்.இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

மேலும், விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்படைவதோடு, மீன் வளம் பாதிக்கப்படும்அபாயமும் உள்ளது. எனவே விநாயகர் ஊர்வலத்தையும், கடலில் கரைக்கும் நிகழ்ச்சியையும் முழுமையாகத் தடைசெய்ய வேண்டும்.

இந்த விழாவை கடந்த காலத்தைப் போல வீட்டளவில் கொண்டாடச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

தடை கோரி வழக்கு:

விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த இளங்கோவன் என்றவழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடலில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதாலும், பூக்கள் உள்ளிட்டவற்றை கொட்டுவதாலும் கடலின் சுற்றுச்சூழல்மாசுபடுகிறது. முன்பெல்லாம் களிமண்ணால் மட்டுமே விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டன.

ஆனால், தற்போது பிளாஸ்டர் ஆப்பாஸ் உள்ளிட்டவற்றால் விநாயகர் சிலைகள் தயாக்கப்படுகின்றன. மேலும்,பல வண்ணப் பூச்சுக்களும் இடம் பெறுகின்றன.

இதன் காரணமாக இந்த சிலைகளை கடலில் கரைக்கும்போது கடல் மீன்கள் இறக்கின்றன. கடற்கரையின் சூழலும்பாதிக்கப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும்எடுப்பதில்லை.

எனவே, விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X