அமைச்சர் பதவியிலிருந்து அன்வர் ராஜா மீண்டும் டிஸ்மிஸ்
சென்னை:
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்வர் ராஜா அப்பதவியிலிருந்து திடீரென்றுநீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், ஏற்கனவே அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட வா.து.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கும் அன்வர் ராஜா ஜெயலலிதாமுதல்வராகப் பதவியேற்ற பிறகு அவரது அமைச்சரவையில் இடம் பெற்றார். பின்னர் அவர்அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். சமீபத்தில் மீண்டும் அமைச்சர் பதவிக்கு வந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்ததொழிலாளர் நலத்துறைக்கு வா.து.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். வா.து. நடராஜனும் சமீபத்தில்பதவியை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் ராம் மோகன் ராவ் இந்தமாற்றங்களை செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வா.து.நடராஜன் புதிய அமைச்சராக நாளை பதவியேற்க உள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications