பாய்ஸ் படத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆபாச வசனங்கள், காட்சிகள் நிரம்பிய பாய்ஸ் படத்தை எதிர்த்து அது திரையிடப்பட்டுள்ளதியேட்டர்கள் முன்பு ஆர்பாட்டம் நடத்தப் போவதாக புதிய தமிழகம் கட்சியின் பொதுச் செயலாளர்டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இதுவரை வெளிவந்த தமிழ்ப்படங்ளிலேயே மிகவும் ஆபாசம் நிறைந்த, குடும்பத்தோடும், பெண்களோடும் பார்க்கவே முடியாதவகையில் பாய்ஸ் படம் அமைந்துளஅளது.
இந்தப் படத்தை தமிழக சென்சார் வாரியம் மறு தணிக்கை செய்ய வேண்டும். இந்தப் படத்திற்குதமிழக அரசு தடை விதிக்க வேண்டும். 2 நாட்களில் இவை நடக்காவிட்டால், இந்தப் படம்திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன்பு புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்என்றார் அவர்.












Click it and Unblock the Notifications