For Quick Alerts
For Daily Alerts
Just In
வாஜ்பாயை ஜெ. வரவேற்க வேண்டும்: பா.ஜ.க.
சென்னை:
சென்னைக்கு வரும் பிரதமர் வாஜ்பாயை, முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்றுதமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமர் மாநிலங்களுக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட முதல்வர்கள்,பிரதமரை வரவேற்பது மரபாகும்.
பிரதமரின் பயணம் தனிப்பட்ட பயணமாக இருந்தாலும் சரி, அலுவல்ரீதியான பயணமாக இருந்தாலும் சரி,அவரை முதல்வர்கள் வரவேற்பது வழக்கமாகும். எனவே பிரதமர் வாஜ்பாய் சனிக்கிழமை சென்னைக்குவரும்போது அவரை முதல்வர் ஜெயலலிதா வரவேற்க வேண்டும்.
கோவில்களில் ஆடு, கோழிகள் வெட்டுவதற்கு தடை விதிப்பது சரியான தீர்வாக முடியாது. இது தொடர்பாகமக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கான பிரசாரத்தில் அரசு ஈடுபட வேண்டும் என்றார்.


