"பாய்ஸ்" படத்தை ஆராய மக்கள் தணிக்கைக் குழு!
சென்னை:
பாய்ஸ் படத்தை ஆராய்ந்து, அதில் செய்ய வேண்டிய வேண்டிய மாற்றங்கள் குறித்து படத்தின்தயாரிப்பாளருக்க ஆலோசனை சொல்ல, மக்கள் தணிக்கைக் குழு என்ற ஒரு அமைப்பைஅமைத்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
இதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக இளைஞர்களின் வாழ்வை சீர்குலைக்கும் விதமாக வெளியாகியுள்ள பாய்ஸ் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். மேலும் படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும்என்றும் சென்சார் போர்ட் அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
இதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் தானே முன் வந்து ஆபாசமான காட்சிகளைவெட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற தவறை எந்தத் தயாரிப்பாளரும் செய்யாமல் தடுப்பதற்காக மக்கள்தணிக்கைக் குழு அமைக்கப்படுகிறது.
இவர்கள் படத்தைப் பார்த்து விட்டு அதில் மக்களை, சமுதாயத்தைக் கெடுக்கும் வகையிலானகாட்சிகள் இருந்தால் அதை அகற்றி விட ஆலோசனை கூறுவார்கள்.
இந்தக் குழு முதலில் பாய்ஸ் படத்தை தணிக்கை செய்யும். மதுரை, கோவை, திருச்சி, சேலம்உள்ளிட்ட முக்கிய நகரங்களைச் சேர்ந்த 100 பேர் இக்குழுவில் இடம் பெறுவர்.
பாய்ஸ் படத்தில் உள்ள ஆட்சேபகரமான வசனங்களை, காட்சிகளை நீக்குமாறு இக் குழுவினர்பாய்ஸ் தயாரிப்பாளரை வற்புறுத்துவர். அது ஏற்கப்பட்டால்தான் பாய்ஸுக்கு எதிரானபோராட்டத்தை நாங்கள் விலக்குவோம் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.