கிரனைட் கற்கள் கடத்தலை தடுத்த தாசில்தார் லாரி ஏற்றிக் கொலை
சென்னை:
சென்னை அருகே கல்குவாரியில் முறையான அனுமதியின்றி கிரனைட் கற்களை வெட்டிஎடுத்தவர்களைத் தடுத்த தாசில்தார், லாரி ஏற்றிக் கொல்லப்பட்டார்.
சென்னை அருகே சில மாதங்களுக்கு முன் மணல் கடத்திய லாரியைத் தடுத்த தாசில்தாரை லாரிஏற்றிக் கொன்றது ஒரு கும்பல். இச் சம்பவம் நடந்த சில மாதங்களுக்குள் மீண்டும் ஒரு தாசில்தார்லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார்.
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர், சோமங்கலம் பகுதியில் ஏராளமான கல்குவாரிகள்உள்ளன. இதில் பல முறைகேடாக இயங்குபவை. பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், பண முதலைகள்,சமூக விரோதிகள் என ஒரு கூட்டணியே இணைந்து இந்த கிரனைட் கற்களை சட்டவிரோதமாகவெட்டிக் கடத்தி வருகின்றன.
மாவட்ட நிர்வாகம், போலீசுக்கு உரிய மாமூல் போய்விடுவதால் இதைக் கண்டு கொள்வதும்இல்லை.
அவ்வப்போது யாராவது சில அதிகாரிகள் இந்த குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது வழக்கம்.இது போலத் தான் கற்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் முயற்சியில் தாசில்தார் புண்ணியகோடிஇறங்கினார்.
லாரிகளில் கிரனைட் கடத்தப்படுவதை நேரில் சென்று தடுக்க சில அதிகாரிகளுடன் காரில் அங்குவிரைந்தார். அப்போது ஒரு லாரியில் கற்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.
இதையடுத்து காரில் இருந்து இறங்கி லாரியை நோக்கி புண்ணியகோடி சென்றார். தாசில்தார்வருவதைப் பார்த்த அக்கும்பல், வேகமாக லாரியை எடுத்தது.
தாசில்தார் புண்ணியகோடி, லாரியை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் லாரியை வேகமாகஎடுத்த டிரைவர், தாசில்தார் மீது லாரியை ஏற்றி விட்டு வேகமாக சென்று விட்டான்.
தலையில் சக்கரம் ஏறியதால், மூளை சிதறி தாசில்தார் புண்ணியகோடி சம்பவ இடத்திலேயேபலியானார். இதைப் பார்த்ததும் கல்குவாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
தாசில்தாரைக் கொன்று விட்டு தப்பியோடிய டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.


