தலைமைச் செயலகம் கட்டி ரூ. 100 கோடி லாபமடிக்க திட்டம்: கருணாநிதி
சென்னை:
நாங்கள் நடத்தி வரும் தேர்தல் நிதி வசூல் தொடர்பாக ஜெயலலிதா கூறியுள்ள கருத்துக்கள்அபாண்டமானவை என்று அந்த நிதியை அளித்தவர்களே கூறுவார்கள் என திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
திமுக தேர்தல் நிதி, தொல்காப்பியப் பூங்கா நூல் விற்பனை நிதி ஆகியவற்றை கொச்சைப்படுத்திஜெயலலிதா ஊட்டியில் பேசியுள்ளார்.
தொல்காப்பியப் பூங்கா நூல் விற்பனை மூலம் கிடைத்த ரூ. 40 லட்சம் தொகையும் திமுகஅறக்கட்டளையிடம் வழங்கப்பட்டு, அதன் மூலம் 480 ஏழை, எளிய, பாதிக்கப்பட்ட திமுகவினர்குடும்பங்களுக்கு பண உதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் நிதி வசூல் குறித்து ஜெயலலிதா கூறும் புகார்கள் அவதூறானவை,அபாண்டமானவை என்பது நிதியளித்தவர்களுக்குத் தெரியும்.
புதிய தலைமைச் செயலகம் என்ற பெயரில் குறைந்தபட்சம் ரூ. 100 கோடி அளவுக்கு லாபம்அடிக்கத் திட்டமிட்டுள்ளது யார் என்று மக்களுக்கு தெரியாமல் போகாது என்று கூறியுள்ளார்கருணாநிதி.


