ஓ.பி. தலைமையில் குழு அமைப்பு
சென்னை:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாகஅமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாப்பா பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஆகிய 3 தலித் சிற்றூராட்சிகளுக்கும் பல காலமாக தேர்தல்நடக்காமல் உள்ளது. தேர்தல் நடந்து முடிந்தாலும் கூட தேர்நதெடுக்கப்படும் தலைவர் அடுத்த நாளே பதவியைராஜினாமா செய்து விடும் அளவுக்கு அந்த ஊர்களில் இன்னொரு ஜாதியினரின் அட்டகாசம் உள்ளது.
இந் நிலையில் அடுத்த மாதம் 9ம் தேதி மீண்டும் இங்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துவிட்டது.இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி இன்று வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாப்பா பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் மற்றும் விருதுநகர்மாவட்டம் கொட்டகச்சி கிராம சிற்றூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இதை ஆராய்ந்து, அங்கு தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்வதற்காக, அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அந்தந்தப் பகுதி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இடம் பெறுவர். இவர்கள் 4 பஞ்சாயத்துக்களிலும்தேர்தல் சுமுகமாக நடைபெற முயற்சிப்பார்கள்.
இவை தவிர 4 சிற்றுராட்சித் தலைவர்கள், 27 வார்டு உறுப்பினர்கள் உள்பட காலியாக உள்ள 420 இடங்களுக்கும்வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
10ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். 11ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார் பழனிச்சாமி.


