விரைவில் ஜெயலலிதா கம்பி எண்ணுவார்: இளங்கோவன்
சென்னை:
விரைவில் முதல்வர் ஜெயலலிதா கம்பிகளுக்குப் பின்னால் போவார் என தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் கூறினார்.
காமராஜர், ராஜீவ்காந்தி, மூப்பனார் பிறந்தநாள் முப்ருெம் விழா சென்னையில் நடந்தது. அதில் பேசியஇளங்கோவன்,
ராமாயணத்தில் 14 வருடம் வனவாசம் என்பார்கள். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் 35 வருடம் வனவாசம்போயிருந்தது.
இப்போது தான் ஒருவழியாய் புதுப்பொலிவு பெற்றுள்ளது. முன்பு எள்ளி நகையாடியவர்கள் கூட காங்கிரஸ்ஆட்சிக்கு வர வேண்டும், அப்போதுதான் நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள்.
தமிழகத்தில் நடக்கும் ஆட்சியின் அலங்கோலங்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. பல மடங்கு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை கட்ட முடியாமல் மயிலாப்பூரில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ளது.
இப்போது கெளரவ ரேஷன் கார்டு என்று ரூ.5,000 வருமானம் உள்ளவர்களுக்கு எந்த பொருளும் இல்லைஎன்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் கூலி வேலை செய்தால் கூட ரூ.5,000 வருமானம் வருகிறது. ஆனால் 20வருடங்களுக்கு முன்பிருந்த மதிப்பை பார்த்தால் அது ரூ.500க்கு கூட சமமில்லை.
மத்திய அரசிடம் இருந்து கிலோ ரூ.2.50க்கு அரிசி வாங்கி, ரூ.3.50 க்கு விற்கிறது தமிழக அரசு. அந்த அரிசியைபையில் எடுத்துச் சென்றால் ஊரெல்லாம் நாறுகிறது.இருப்பினும் வேறு வழியில்லாமல் சாப்பிடுகிறார்கள் மக்கள்.
தமிழகத்தில் வேலை வாய்ப்புகளே கிடையாது. வேலையில் இருந்த 6,000 பேரையும் நீக்கிவிட்டனர்.போக்குவரத்து தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பப் போகிறார்கள். இந்த மக்கள் விரோத அரசுக்கு முடிவுகட்ட வேண்டும். 2006 வரை இந்த அம்மையார் இருந்தால் நாடு தாங்காது.
கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்ற தேர்தலும் வர வேண்டும். டான்சி வழக்கில் ஒரு மாதத்தில்இந்த அம்மையார் கம்பிகளுக்குப் பின்னால் போகத் தான் போகிறார்.
நாட்டின் பிரதமருக்கு மரியாதை கொடுப்பதுதான் நாகரீகம். சென்னை வந்த அவரை வரவேற்கக் கூட போகாமல்,அவர் டெல்லி சென்றபின் காவிரி பிரச்சினை குறித்து கடிதம் எழுதுவது என்ன நியாயம் ? யாரை ஏமாற்றும்வேலை இது?.
வருகிற காலம் நல்ல காலமாக அமையும். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுகிற ஆட்சிகளை விரைவில் வீட்டுக்குஅனுப்ப காங்கிரசுக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.

