For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதல் தம்பதியின் பெற்றோரை அவமானப்படுத்திய பஞ்சாயத்து!!

By Staff
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் என்ற இடத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தம்பதியரை காலில் விழவைத்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளது பஞ்சாயத்து.

சமீபத்தில் தான் திருச்சி அருகே ஒரு பெண்ணை 5 மண்டியிட வைத்து பஞ்சாயத்தார் கொடுமை செய்தனர்.இதையடுத்து அவர்களை உயர் நீதிமன்றம் கண்டித்தது.

இந் நிலையில் அதே போன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. பூதமங்கலம் வேடியப்பந்தாங்கல் காலனியைச்சேர்ந்தவர் முனுசாமி. இவரது மூத்த மகன் இராஜேந்திரன். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும்வடுகப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவரின் மகள் காந்தியும் காதலித்தனர். இவர் வன்னிய சமூகத்தைச்சேர்ந்தவர்.

ராஜேந்திரனால் காந்தி கர்ப்பம் தரித்துள்ளார். எனவே இருவரும் மங்கலம் முருகன் கோவிலில் இரு மாதங்களுக்குமுன் திருமணம் செய்து கொண்டு வேலை தேடி பெங்களூர் சென்றனர்.

இந்தத் திருமணத்தால் ஆத்திரமுற்ற காந்தியின் உறவினர்களும் அப் பகுதி வன்னிய இன முக்கியஸ்தர்களும்சேர்ந்து ராஜேந்திரனின் தந்தை முனுசாமியை மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். தந்தை தாக்கப்பட்டதைஅறிந்த ராஜேந்திரன் தனது மனைவி காந்தியுடன் பெங்களூரில் இருந்து கடந்த மாதம் ஊருக்குத் திரும்பி வந்தார்.

அப்போது காந்தியின் உறவினர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர் ராஜேந்திரன், தேசிங்கு என்பவரின் மகன்சுப்பிரமணி, மேலும் பலர் ஒன்று சேர்ந்து அவரது தாலியை அறுத்தெறிந்துள்ளனர். காந்தியின் சேலையை உருவிஅவமானப்படுத்தியுள்ளனர்.

மேலும் கணவன்- மனைவியையும் பிரித்துவிட்டு இனி ஒன்று சேர்ந்தால் இருவரையும் கொல்வோம் எனமிரட்டியுள்ளனர்.

பின்னர் ஊர்ப் பஞ்சாயத்து கூடி இவர்களது காதல் திருமணம் குறித்து விசாரித்தது. அப்போது, தாழ்த்தப்பட்டவகுப்பை சேர்ந்த ராஜோந்திரன் வன்னிய இனப் பெண்ணான காந்தியை திருமணம் செய்து கொண்டது தவறுஎன்றும் இதற்காக ராஜேந்திரனின் பெற்றோர் ஊர்ப் பஞ்சாயத்துக்கு ரூ .20,000 அபராதம் செலுத்துவதுடன்பஞ்சாயத்தார் அனைவரின் கால்களிலும் வரிசையாக விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அடாவடிதீர்ப்பளித்தனர்.

இதைச் செய்யாவிட்டால் ஊரை விட்டு வெளியேற்றுவோம், கொல்வோம் என மிரட்டியதால் ராஜேந்திரனும்அவரது வயதான தந்தை முனுசாமி மற்றும் முதிய தாயார் ஆகியோர் பஞ்சாயத்துக் கும்பலின் கால்களில்வரிசையாக விழுந்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஒவ்வொருவர் கால்களிலும் கண்ணீருடன் விழுந்துஎழுந்தது ராஜேந்திரனின் குடும்பம்.

தன்னால் தனது பெற்றோர் காலில் விழ நேர்ந்த அவமானத்தை நினைத்து நொந்த ராஜேந்திரன் கதறியழுதபடிஅனைவர் கால்களிலும் விழுந்தார்.

இது தவிர இந்தக் காதலுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி காந்தியின் விதவைத் தாயாரான மல்லிகாவைபஞ்சாயத்து கும்பல் தாக்கியுள்ளது. மேலும், ரூ.40,000 அபராதம் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால்,பணமில்லாததால் அதைக் கட்டாமல் போன மல்லிகா இப்போது ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து காந்தி திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும், ராஜேந்திரன் திருவண்ணாமலைதாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு பிரிவு போலீஸாரிடமும் புகார் செய்துள்ளனர்.

தற்போது இந்த இருவரையும் திருவண்ணாமலை மாவட்ட கலப்பு திருமணம் செய்து கொண்டோர் சங்கத்தினர்தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X