அத்வானியுடன் செஞ்சி ராமச்சந்திரன், கணேசன் சந்திப்பு
டெல்லி:
மத்திய அமைச்சர் கண்ணப்பன் மீது தமிழக அரசு பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உள்ள நிலையில் அதுகுறித்து மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் மற்றும் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர்துணைப் பிரதமர் அத்வானியைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது, தமிழக அரசு வரம்பு மீறி நடப்பதாகவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்என்றும் அவர்கள் கோரியதாகத் தெரிகிறது.
மேலும் பொடா மறு ஆய்வுக் கமிட்டியிடம் விரைவில் அறிக்கை பெற்று வைகோ விடுதலைக்கு மத்திய அரசுஉடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே மதுரை திருமங்கலத்தில் புலிகள் தொடர்பாக வைகோ என்ன பேசினார் என்பதன் ஆங்கியமொழியாக்க உரையை பொடா மறு ஆய்வுக் கமிட்டியிடம் எல்.கணேசன் இன்று சமர்பிக்க உள்ளார்.
பொடா கைதுகள் குறித்து இந்தக் கமிட்டி தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும் இதுவரைஅரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தமிழகத்தின் விளக்கத்துக்குகாத்திருக்காமல் இந்தக் கமிட்டியே தமிழக பொடா கைதுகள் குறித்த தனது பரிந்துரையை இரண்டு வாரங்களில்மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் வைகோ விரைவில் விடுவிக்கப்படுவார் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே வைகோ விடுதலை, கண்ணப்பன் விவகாரம் ஆகியவற்றில் உதவ வேண்டுமானால்,கூட்டணியைவிட்டு திமுக வெளியே போனாலும் மதிமுக போகக் கூடாது என பா.ஜ.க. நிபந்தனை விதித்துவருவதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

