For Daily Alerts
Just In
கோவிலில் நடந்த தெலுங்கு பட சூட்டிங்குக்கு தடை
நாகப்பட்டனம்:
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள புகழ் பெற்ற சட்டநாதர் கோவிலில் அனுமதியின்றி நடந்த தெலுங்குப்படப்பிடிப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்தக் கோவிலில் பதி என்ற தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகி வீணாவும், கதாநாயகனும்டூயட் பாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட இருந்தது.
இந் நிலையில் கோவிலில் படப்பிடிப்பு நடத்த ஆன்மீகப் பேரவை என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்துஅறநிலையத்துறை இணை ஆணையடரிம் புகார் செய்தது.
இதையடுத்து கோவிலுக்கு வந்த அதிகாரிகள், அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்திய படப்பிடிப்புக்குழுவினரை கடிந்து கொண்டனர். படப்பிடிப்பையும் ரத்து செய்ய உத்தரவிட்டனர்.
இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

