சுப. இளவரசனை சுட்டுப் பிடிக்க அரசு உத்தரவு
பெரம்பலூர்:
பெரம்பலூர் பகுதியில் தலைமறைவாகப் பதுங்கியிருக்கும் தமிழர் விடுதலைப் படை அமைப்பின் தலைவர் சுப.இளவரசனை சுட்டுப் பிடிக்க மாவட்ட போலீஸாருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழர் விடுதலைப் படை என்ற நக்சலைட் அமைப்பின் தலைவர் சுப. இளவரசன். சந்தனக் கடத்தல் வீரப்பனுடன்நெருங்கிய தொடர்பு உடையவர் என தமிழக அரசு குற்றம் சாட்டுகிறது.
வீரப்பனுக்கு பல்வேறு வகையான ஆயுதங்களை கொடுத்து உதவியதாகவும், ஆண்டிமடம் காவல் நிலையத்தைத்தாக்கி ஆயுதங்களை எடுத்துச் சென்றதாகவும் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
தமிழர் விடுதலைப் படைக்கு அரசு தடை விதித்துள்ளதால், சுப. இளவரசனை பிடிக்க போலீஸாருக்குஉத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் தலைமறைவாக இருப்பதால் பிடிக்க முடியாமல் போலீஸ் திண்டாடிவருகிறது.
இந் நிலையில், தேவைப்பட்டால் சுட்டுப் பிடிக்கவும், பெரம்பலூர் மாவட்ட போலீஸாருக்கு அரசு அதிகாரம்வழங்கியுள்ளது.
இதுதொடர்பான உத்தரவை, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் தேன்மொழிக்கு அரசு அனுப்பியுள்ளது.

