கோபாலின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்ட்டுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
கோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரியவா மற்றும் செமா ஆகியோர் கோபாலுக்கு வழங்கப்பட்டஜாமீனை ரத்து செய்தனர்.
இதற்கிடையே, கோபாலுக்கு பவானி நீதிமன்றம் பிறப்பித்த காவல் நீட்டிப்பு உத்தரவை ஈரோடு மாவட்டசெஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
போலீஸ் உளவாளி கந்தவேலு என்பவர் கொலை வழக்கில் கோபால் மீது பவானி நீதிமன்றத்தில் வழக்குநிலுவையில் உள்ளது. இந்த வழக்கில், கோபாலை சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ளது.இந் நிலையில் கோபாலுக்கு பவானி நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கோபால் தரப்பில் ஈரோடு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில், சென்னைஉயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டும், பவானி நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்துள்ளது.இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோபால் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கோபாலின் காவல் நீட்டிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications