எஸ்.பி. அலுவலகத்தில் போராட்டம் நடத்திய ஏட்டு மரணம்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கால் துண்டிக்கப்பட்ட நிலையில் தனது 2-வதுமனைவியுடன் போராட்டம் நடத்திய ஏட்டு, வலுகட்டாயமாக அகற்றப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் போக்குவரத்து தலைமைக் காவலராக இருந்தவர் சம்பத் குமார். இவருக்கு இரண்டுமனைவிகள். முதல் மனைவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, சமீப காலமாக தனது இரண்டாவது மனைவிலட்சுமியுடன் வசித்து வந்தார்.

இந் நிலையில், லட்சுமிக்கும் புகழேந்தி என்பவருக்கும் இடையே குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறுஏற்பட்டது. அப்போது லட்சுமிக்கு ஆதரவாக பேசிய சம்பத்குமாரை புகழேந்தி மற்றும் அவரது உறவினர்கள்தாக்கியதாகத் தெரிகிறது. இதில் சம்பத்குமாருக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சம்பத்குமார் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கால் முறிவுதீவிரமாக இருந்ததால், இடது காலை டாக்டர்கள் துண்டித்து விட்டனர்.

இந் நிலையில் திடீரென்று அவரது உடல் நிலை மோசமடைந்தது. தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போய்சேர்க்குமாறு லட்சுமியிடம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறிவிட்டனர்.

ஆனால் லட்சுமி, தனது கணவரை அழைத்துக் கொண்டு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்அலுவலகத்திற்கு வந்தார். அங்கு வாசலில் அமர்ந்து, தனது கணவரைத் தாக்கியவர்களை உடனடியாக கைதுசெய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், எஸ்.பி பொன். மாணிக்கவேலோ பிற அதிகாரிகளோ இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

2 நாட்களாக சம்பத்குமார் அலுவலக வளாகத்திலேயே படுக்க வைக்கப்பட்டிருந்ததால் அவரது உடல் நிலைமேலும் மோசமடைந்தது. இதையடுத்து சம்பத் குமாரை கைது செய்து மருத்துவமனையில் சேர்க்க போலீஸாருக்குஉத்தரவிடப்பட்டது.

ஆனால் சம்பத் குமாரை அழைத்துச் செல்ல லட்சுமி அனுமதிக்கவில்லை. போலீஸாருடன் மபரண்டு பிடித்துதரையில் உருண்டு போராட்டம் நடத்தினார்

இருப்பினும் வலுக்கட்டாயமாக சம்பத்குமார் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டு மீண்டும் சேலம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு இறந்து விட்டார்.

இந்த சம்பவம் சேலம் காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+