கண்ணப்பனுக்கு எதிராக பொடா: பிரதமருக்கு கடிதம் எழுதச் சொன்னது அத்வானி?
டெல்லி:
மத்திய அமைச்சர் கண்ணப்பனைக் கைது செய்யும் முன் அதற்கு அனுமதி கோரி கடிதம் எழுதுமாறு தமிழகஅரசுக்கு யோசனை கூறியதே துணைப் பிரதமர் அத்வானி என்று கூறப்படுகிறது.
கண்ணப்பனைக் கைது செய்வது குறித்து முடிவு செய்ததும், அது தொடர்பாக அத்வானியை முதல்வர் ஜெயலலிதாதொடர்பு கொண்டதாகத் தெரிகிறது.
பா.ஜ.கவில் இருந்து அதிமுகவுக்குத் தாவி எம்.பியுமான டாக்டர் மைத்ரேயன் தான் இது தொடர்பாகஅத்வானியிடம் பேசியுள்ளார்.
அப்போது அவர் தான் கண்ணப்பனை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கவும், கைது செய்யவும் அனுமதிகோரி பிரதமருக்குக் கடிதம் எழுதுமாறு மைத்ரேயன் மூலம் ஜெயலலிதாவுக்குத் தகவல் சொன்னதாகத் தெரிகிறது.
இதனால் கண்ணப்பன் கைதானால் அதில் அத்வானியின் பங்கும் இருக்கும் என்கிறார்கள்.
வைகோ கைது செய்யப்பட்ட விஷயத்தில் ஜெயலலிதாவுக்கு முழு ஆதரவாக இருந்தவர் அத்வானி தான்.பொடாவை தமிழக அரசு தவறாக பயன்படுத்தவில்லை என்று அத்வானி சமீபத்தில் சர்டிபிகேட்டும் தந்ததுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் வாஜ்பாய் நேற்றிரவு டெல்லிதிரும்பினார். இன்று அவரை மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி சந்தித்துப் பேசினார். பாபர் மசூதி இடிப்புவிவகாரத்தில் அவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதால் தனது பதவியை அவர்ராஜினாமா செய்தார்.
ஜோஷியின் ராஜினாமாவை பிரதமர் ஏற்கவில்லை என்று தெரிகிறது. வாஜ்பாயைச் சந்தித்த ஜோஷி பின்னர்,தனக்கு எதிரான ராய்பரேலி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கண்ணப்பன் விவகாரம் குறித்து வாஜ்பாய் இன்று பா.ஜ.க. தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டுமுடிவெடுப்பார் என்று தெரிகிறது.
வைகோ பேட்டி:
இதற்கிடையே இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோநிருபர்களிடம் பேசுகையில்,
மத்திய அமைச்சரான கண்ணப்பனைக் கைது செய்தால் மிகக் கடுமையாக விளைவுகள் ஏற்படும். அரசியல்சட்டத்துக்கு விரோதமான இந்தச் செயல் குறித்து டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்திர சர்க்கார்மற்றும் பார் கவுன்சில் துணைத் தலைவர் ராஜிவ் தாவன் ஆகியோர் தமிழக அரசை எச்சரித்துள்ளதை சுட்டிக் காட்டவிரும்புகிறேன் என்றார்.


