For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய விண்கலத்தில் அமர்ந்து இன்னொரு கிரகம் சென்றுவர வேண்டும்: கலாம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும் இந்திய விண்கலத்தில் அமர்ந்து இன்னொரு கிரகத்துக்குச் சென்று வர ஆர்வமாக இருப்பதாக ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.

நேற்றிரவுசிறப்பு விமானத்தில் சென்னை வந்த அப்துல் கலாமை ஆளுநர் ராம் மோகன் ராவ், முதல்வர்ஜெயலலிதா, அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் ராஜ்பவனில் தங்கிய கலாம், இன்று காலை ஹெலிகாப்டர் மூலம்ஸ்ரீஹரிகோட்டா சென்றார்.

அங்குள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவின் விண்வெளிச் சாதனைகள் சாதாரணமானவை அல்ல. இந்த ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில்இருந்து வரை 17 ராக்கெட்டுகளை செலுத்திவிட்டோம். இன்னும் சில வாரத்தில் அடுத்த ராக்கெட்டை செலுத்தப்போகிறோம்.

மிகக் கடினமான தொழில்நுட்பம் கொண்ட பி.எஸ்.எல்.வி., அதைவிட அதி நவீனமான ஜி.எஸ்.எல்.வியைஉருவாக்கிவிட்டோம்.

நிலாவுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரோவின் திட்டம் மிக அபாரமானது.

நிலவில் நமது விண்கலம் இறங்கும் நாளை இந்த தேசமே கொண்டாடும். இளைய சமுதாயத்தின் மத்தியில்அறிவியல் ஆராய்ச்சி குறித்தான ஆர்வத்தை அது நிச்சயம் தட்டி எழுப்பும். ஆகவே, நிலவுக்கு கலம் அனுப்பும்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.

இது இஸ்ரோ விஞ்ஞானிகளான உங்களால் முடியும். இதுவரை நீங்கள் செய்து காட்டிய சாதனைகளுக்கு அதுமகுடமாக அமையும்.

ராக்கெட் தொழில்நுட்பத்தை மேலும் நவீனப்படுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் பயன்படுத்தத் தக்க ரீ-யூசபிள்(Re-usable) ராக்கெட்டுகளை உருவாக்க வேண்டும். அந்த ராக்கெட்டை பிற கோள்களுக்கும் இயக்க வேண்டும்.

அதில் சக பயணிகளுடன் அமர்ந்து இன்னொரு கோளுக்கு போய் வரும் நாளை நோக்கி ஆர்வமாய்காத்திருகிறேன். 2021ல் அது நடந்தால், அப்போது 90 வயதாகும் நான் பத்திரமாய் இன்னொரு கோளுக்குப்போய் பத்திரமாய் திரும்பி வருவேன்.

தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் விண்வெளி ஆராய்ச்சி உதவ வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது. பிறநாடுகளின் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் வகையில் நமது ராக்கெட்களை நவீனமானதாகவும்திறனுடையதாகவும் உருவாக்கியாக வேண்டும்.

நிலவுக்கு அனுப்ப உருவாக்கப்பட்டு வரும் செயற்கைக் கோளின் மொத்த எடையில் 15 கிலோ எடைக்கு என்னகருவிகள் வைப்பது என்பது குறித்து இஸ்ரோ ஆலோசனைகள் நடத்தி வருகிறது. அதில் ஒரு டெலிமெட்ரிகருவியை வைக்கலாம். அதை நிலவில் தரையிறக்கி ஆராயலாம் என்று யோசனை சொல்லியிருக்கிறேன் என்றார்கலாம்.

முன்னதாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் குறித்து விஞ்ஞானிகளுக்கு சில ஆலோசனைகளையும் கலாம் வழங்கினார்.

மாலையில் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் கலாம் அங்கு ராஜிவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.பின்னர் சென்னையில் நடைபெறும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் வெள்ளி விழா நிகழ்ச்சிகளைத்தொடங்கி வைத்த பின் இன்றிரவே டெல்லி திரும்புகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X