ராஜிவ் நினைவிடத்தில்.. ராஜிவ் நினைவுகளில் சோனியா குடும்பம்
சென்னை:
ராஜிவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சோனியா காந்தி தனது கணவரின்நினைவுகளில் ஆழ்ந்தார். துயரம் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். பிரியங்கா தனது உணர்வுகளைக்கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி கண்ணீர் விட்டு அழுதார். அவரை சகோதரர் ராகுல் காந்தி ஆறுதல் படுத்தினார்.
நிகழ்ச்சியில் யாரும் பேசுவதாக திட்டமில்லை. இருப்பினும், மரபுகளை மீறி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்பிரார்த்தனை ஒன்றை நடத்தினார். முதலில் தமிழிலும், பின்னர் ஆங்கிலத்திலும் அவர் பிரார்த்தனை நடத்தியதுகூடியிருந்தவர்களிடையே பெரும் உருக்கத்தையும் கண்ணீரையும் வரவழைத்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம் ராஜிவ் என்னுடன்இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது என்றார் கண்ணீரை அடக்கியபடி. பிரியங்கா பேசுகையில்,இன்னும் எனக்கு என் தந்தை கொல்லப்பட்ட அந்த தினம் தான் நினைவுக்கு வருகிறது என்றார்.
7 மாநில காங்கிரஸ் முதல்வர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் கலந்து கொண்டார்.முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடைசி நேரத்தில் அழைப்பு சென்றது. ஒப்புக்கு அனுப்பப்பட்ட இந்த அழைப்பைப்புறக்கணித்த ஜெயலலிதா அமைச்சர் மில்லரை அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒலிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர். பாலுவின் திடீர் வருகை அரசியல் புருவங்களை உயரச் செய்துள்ளது.

