இலவச மின்சாரம் கோரி விவசாயிகள் போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது
சென்னை:
இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து திமுகவின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியஆயிரக்கணக்கான விவசாயிகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீண்டும் இலவச மின்சாரம் வழங்கக் கோரியும், விவசாய பம்ப் செட்களுக்கு மீட்டர் பொறுத்தப்பட்டதைஎதிர்த்தும் திமுக விவசாயிகள் பிரிவுச் செயலாளர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் மாநிலம் முழுவதும்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் ஆதரவுதெரிவித்தன.
இதைத் தொடர்ந்து இன்று காலை மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருநெல்வேலி, கடலூர், திருச்சி உள்ளிட்டமாவட்டங்களில் திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாயிகள் பிரிவினர் போராட்டத்திலும்சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இன்று முதல்வர் ஜெயலலிதா நாகப்பட்டிணம் வரும் நிலையில் அவருக்கு கறுப்புக் கொடி காட்டப் போவதாகவும்விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதையத்து இந்த மாவட்டத்தில் போராட்டத்துக்கு பக்க பலமாக இருந்தஅனைத்து விவசாயிகள் பிரிவுகளின் முக்கியஸ்தர்களும் கைது செய்யப்பட்டுவிட்டனர்.
அதே போல கோவையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தலைமையில் நடந்த போராட்டத்தில்500 பேர் கலந்து கொண்டனர். திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியும் இதில் கலந்து கொண்டார்.ஆர்ப்பாட்டம் செய்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில், மேயர் செ.ராமச்சந்திரன் உள்ளிட்ட சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேபோல, திருச்சியில்,முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இங்கு 300 பேர்கைது செய்யப்பட்டனர்.
சேலத்தில் திமுக விவசாய அணிச் செயலர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் 200 பேர் போராட்டம் நடத்திகைதாகினர்.

