அய்யர் என்னை ஆபாசமாகத் திட்டினார்: ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
மணிசங்கர் அய்யர் நல்ல மனிதர் அல்ல என்பது காரைக்கால் சம்பவம் மூலம் தெரிய வருகிறது என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
நாகை அரசு விழாவுக்குப் பிறகு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. மணி சங்கர அய்யர் தாக்கப்பட்ட சம்பவம்குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதில்,
நாகப்பட்டிணத்தில் நடந்த அரசு விழா நிகழ்ச்சிகள் குறித்து மணிசங்கர அய்யர் மிகைப்படுத்தி பேசி வருகிறார்.கருணாநிதி மற்றும் பிற கட்சித் தலைவர்கள் குறிப்பிட்டது போல அல்லாமல் அய்யர் மீது மிகச் சிறிய அளவிலேயேதாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. பத்திரிக்கைகள் தான் இந்தச் சம்பவததைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டுவருகின்றன.
குருவாயூர் கோவிலுக்கு நான் யானை தானம் கொடுத்ததை கிண்டல் செய்து மணிசங்கர் அய்யர் கட்டுரைஎழுதினார். இதை இப்போது என்னை விமர்சிக்கும் தலைவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?. நான் எம்.பியைத்தாக்கிப் பேசியதாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மணிசங்கர் அய்யர் ஏற்கனவே எழுதியதை மேடையில் கூறுவாரா என்று தான் கேட்டேன்.
மணிசங்கர் அய்யர் வேண்டுமென்றே அரசு விழா தொடங்கிய பின் தாமதமாக வந்தார். இது அவரதுஅவமரியாதையைக் காட்டுகிறது. நான் அதைப் பெரிதுபடுத்தாமல் விழாவில் பேச வாய்ப்பளித்தேன்.
நான் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிய பிறகு அய்யர் என் அருகில் வந்து ஆங்கிலத்தில் தரக்குறைவாக, ஆபாசமான வார்த்தைகளால் திட்டினார். அவை அச்சிட முடியாதவை ஆகும். எனவே, அவற்றை நான்கூற விரும்பவில்லை. எந்த கண்ணியமான பெண்ணும் அந்த வார்த்தைகளை திரும்பச் சொல்ல மாட்டார்.
அது மேடையில் இருந்த சபாநாயகர் காளிமுத்துவுக்கும் தெரியும். அய்யர் அப்படி பேசியபோதும் நான்அவருக்கு பதில் ஏதும் கூறாமல் விட்டுவிட்டேன். இது பற்றி யாரிடமும் தெரிவிக்கவும் இல்லை,
ஆனால், மணிசங்கர் ஐய்யர் தவறான தகவல்களைக் கூறுவதால் இப்போது நான் அதைக் கூற வேண்டியதாயிற்று.
கோவிலுக்கு தானம் தருவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அதை யாரும் விமர்சிக்க மாட்டார்கள். அய்யர் எனமத உணர்வை விமர்சித்தது மட்டுமல்லாமல் அவரது கட்டுரையில் மோசமாக என்னைப் பற்றி எழுதினார்.
மணிசங்கர அய்யர் தாக்கப்பட்டிருப்பது காரைக்காலில்தான். காரைக்கால் புதுவை மாநிலத்தில் உள்ளது. இந்தசம்பவத்தில் அதிகவினருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஏன் அதில் அதிமுகவினரைத் தொடர்புபடுத்தினார்கள்என்று தெரியவில்லை.
புதுவையில் தாக்குதல் நடந்திருப்பதால் புதுவை போலீஸார்தான் இதுகுறித்து விசாரிக்க வேண்டும். அவர்கள்தான்மணிசங்கர அய்யருக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு மணி சங்கர அய்யருக்கு பாதுகாப்புஅளிக்க வேண்டும் என்று தமிழக அரசை எதிர் க்கட்சிகள் வலியுறுத்துவது ஆச்சரியமாக உள்ளது.
காங்கிரசார் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வுதம், சட்டையைக் கிழித்துக் கொள்வதும் வழக்கமானஒன்று தான். இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தின் பல இடங்களிலும், சத்தியமூர்த்தி பவனிலும் நடந்துள்ளது.
மயிலாடுதுறையில் மணிசங்கர அய்யரின் அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து தமிழக போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த அலுவலகத்தை காங்கிரஸாரில் ஒரு பிரிவினரே கூடதாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. முழுமையான விசாரணைக்குப் பின்னர்தான் உண்மைஎன்னவென்று தெரிய வரும்.
விசாரணை முடிவு தெரிவதற்கு முன்பே அதிமுகவினரை தொடர்புபடுத்திப் பேசுவது பொது மக்கள் மத்தியில்அனுதாபம் பெறும் முயற்சி தான். அதிமுக மீது வீண் பழி போட முயற்சி நடக்கிறது.
சில தலைவர்களும் பத்திரிக்கைகளும் கூறுவது போல மணி சங்கர் அய்யர் மீது கொலை முயற்சி தாக்குதல்நடந்திருந்தால் சிறு கீறல் கூட இல்லாமல் அவர் தப்பித்து இருக்க முடியுமா? (!!).இது வேடிக்கையாக இருக்கிறது.
நான் கண்ணியம் காத்தது போல மணிசங்கர் அய்யர் கண்ணியத்தை காப்பாற்றிக் கொள்ளவில்லை. தமிழகமுதல்வர் என்ற முறையில் நான் சொல்வது என்னவெனில், அவருக்கு தமிழகத்தில் முழு பாதுகாப்பு உண்டு. எந்தஆபத்தும் இல்லை. பாதுகாப்பு கேட்டால் அதை வழங்குவோம் என்று அறிக்கையில் கூறியுள்ளார் ஜெயலலிதா.
இப்போது அய்யர் தன்னை ஆபசமாகத் திட்டியதாகக் குற்றம் சாட்டும் முதல்வர் ஜெயலலிதா, முன்பொரு முறைதமிழக ஆளுநர் சென்னா ரெட்டி என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சட்டசபையில் குண்டு போட்டார்என்பது நினைவுகூறத்தக்கது.

