என்னைத் தாக்க தூண்டியது ஜெயலலிதா தான்: அய்யர்
காரைக்கால்:
என்னைத் தாக்குமாறு விழா மேடையிலேயே அமைச்சர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா சிக்னல் கொடுத்தார் எனகாங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர் குற்றம் சாட்டியுள்ளார்.
என் மீதான தாக்குதல் சம்பவம் மற்றும் நாகை அரசு விழாவில் அநாகரீகமாப பேசியதற்காக ஜெயலலிதா பகிரங்கமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
|
நாகப்பட்டிணம் விழாவில் தன்னை மட்டம் தட்டி பேசிய முதல்வர் ஜெயலலிதாவிடம் சென்று கோபமாய் பேசிய எம்.பி. மணிசங்கர் அய்யர் (படம் நன்றி- தினகரன்)
ஆளுநர் வெளியூர் பயணத்தில் இருப்பதால் ராஜ்பவன் அதிகாரிகளிடம் தனது மனுவை கொடுத்தார் அய்யர்.
என் மீதான தாக்குதலை முதல்வர் ஜெயலலிதா தான் தூண்டினார். அவரைத் தவிர வேறு யார் தூண்டிருக்க முடியும்.அதிமுகவினர் அவர் சொன்னால் தானே மூச்சு கூட விடுகிறார்கள். பாண்டிச்சேரி போலீசார் இது குறித்துவிசாரிக்கிறார்கள். அதற்கு தமிழக போலீஸ் ஒத்துழைப்புத் தந்தால், தாக்கத் தூண்டிய மூத்த தலைவர் யார், தாக்கவந்த வாகனம் யாருடையது என்று தெரியவரும்.
சோனியாவை ஜெயலலிதா விமர்சித்ததை எதிர்த்துத் தான் நான் கல்கத்தாவில் வெளியாகும் ஒரு பத்திரிக்கையில்ஜெயலலிதா பற்றி எழுதினேன். அதை மேடையில் பேசி தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொண்டார்ஜெயலலிதா.
மேடையில் எனக்கு சவால் விட்டுப் பேசினார். அதே மேடையில் என்னைத் தவிர மேலும் இரண்டு பேர் இருந்தனர்.அதில் ஒருவர் ஒரு காலத்தில், ஜானகி அம்மையாரைப் பார்த்தால் கும்பிடத் தோன்றுகிறது. ஜெயலலிதாவைப்பார்த்தால் கூப்பிடத் தோன்றுகிறது என்று பேசியவர். அவரை அதே மேடையில் மறுபடியும் அப்படி பேசச்சொல்வாரா ஜெயலலிதா.
ஜெயலலிதா என்னை அவமானப்படுத்திப் பேசியும் கூட அமைதியாகவே இருந்தேன். அவர் பேசி முடித்த பின்னர்தான் அவரிடம் போய் எனது அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டுக் கிளம்பினேன்.
பின்னர் டிவியில் பார்த்தபோது தான் தெரிந்தது. அந்த அம்மா அப்படிேயே அசந்து போய் இரண்டு நிமிடம்உட்கார்ந்திருக்கிறார். பின்னர் மூத்த அமைச்சர்களைக் கூப்பிட்டு யார், யாருக்கு என்ன வேலை என்று சிக்னல்கொடுத்து இருக்கிறார். அதன்படி என்னை வழிமறுத்துத் தாக்கினார்கள்.
அநாகரீகமாகப் பேசிய ஜெயலலிதா அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க டெல்லி செல்ல இருக்கிறேன் என்றார் மணிசங்கர அய்யர்.
நான் இன்று உயிருடன் இருப்பதற்கு எனது டிரைவர்தான் காரணம், அவர் தான் அந்த கொலை வெறிக் கும்பலிடம்இருந்து தப்பும் வகையில் காரை வேகமாக ஓட்டி என்னைக் காப்பாற்றி விட்டார் என்றார் அய்யர்.
மயிலாடுதுறையில் அய்யரின் எம்.பி. அலுவலகத்தைத் தாக்கிய அதிமுகவினர் அங்கிருந்த மகாத்மா காந்தியின்படத்தைக் கூட கிழித்து சேதப்படுத்தியுள்ளனர்.

