சொத்துக் குவிப்பு: ஜெவுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி:
வருமானத்தை மீறி முதல்வர் ஜெயலலிதாவும், சசிகலா குடும்பத்தினரும் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கைவேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துவிட்டது.
ஏற்கனவே டான்சி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டதுநினைவுகூறத்தக்கது. அதே போல இந்த வழக்கின் தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா, அவரது அக்காள் மகன் தினகரன், ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன்சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளின் விசாரணையை சென்னை தனிநீதிமன்றத்திலிருந்து வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி வரியவா மற்றும் நீதிபதி சேமா ஆகியோர் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் முன் நடந்தது.
இதில் இறுதிக் கட்ட விசாரணையின்போது அன்பழகனின் வழக்கறிஞர் அந்தியார்ஜுனா கூறியதாவது:
குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் மொத்தமுள்ள 43 சாட்சிகளில் 37 பேர பல்டி அடித்ததால்தான் அந்த வழக்கில்குற்றம் சாட்டப்பட்ட 21 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அதை உச்ச நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது.
அதே போலத்தான் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கிலும் 76 சாட்சிகளில் 64சாட்சிகள் பல்டி அடித்துள்ளனர். சாட்சிகள் பல்டி அடித்ததை அரசு தரப்பு வழக்கறிஞர் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தார். இதனால் தான் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட அத்தனை பேரும்ஒட்டுமொத்தமாக விடுதலை செயய்ப்பட்டு விடுவார்களோ என்று கவலையாக உள்ளது.
இந்த பல்டி சாட்சியங்களை அப்படியே எடுத்துக் கொண்டால் ஜெயலலிதா உட்பட அனைவரும் விடுதலையாவதுநிச்சயம். இதைத் தடுத்து நிறுத்தத்தான் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.
ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் இந்த வழக்கு சென்னையில் நடந்தால் நியாயமான, நேர்மையான நீதிகிடைக்காது. எனவே உச்சநீதிமன்றம் இவ்வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றி சி.பி.ஐ. மூலம் விசாரணை செய்யவேண்டும் என்றார் அந்தியார்ஜுனா.
தமிழக அரசு வழக்கறிஞர்:
இதையடுத்துப் பேசிய தமிழக அரசின் வழக்கறிஞரான, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அல்தாப் அகமதுகூறியதாவது:
தனி நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நடந்தபோது சாட்சிகள் பல்டி அடித்ததாகவும், அரசு தரப்பு வழக்கறிஞர் தவறுசெய்துவிட்டதாகவும் எதிர்தரப்பு வக்கீல் கூறினார். ஜெயலலிதாவுக்கு கட்டுப்பட்டு அரசு தரப்பு வழக்கறிஞர் நடந்துகெண்டார் என்று கூறுவது சரியல்ல.
மிகச் சரியாக நடந்து கொண்ட அரசு தரப்பு வழக்கறிஞரை தவறு செய்ததாக இந் நீதிமன்றம் கருதினால் அவரைமாற்றிக் கொள்ளலாம் என்றார்.
நீதிபதி சூடு:
அப்போது குறுக்கிட்ட நீதிபதி வரியவா, 64 சாட்சிகள் பல்டியடித்தபோது நீங்கள் காரணம் கேட்காமல் பார்த்துக்கொண்டிருந்தீர்கள், குறுக்கு விசாரணை கூட நடத்தவில்லை. இப்படித்தான் அரசு தரப்பு வழக்கறிஞர் நடந்துகொள்வதா?
பல்டி அடித்த சாட்சிககளைக் கொண்டு வழக்கின் ஆதாரங்களையே அழிக்க அனுமதித்திருக்கிறீர்கள் என்றார்.
இதையடுத்துப் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் (ஜெயலலிதா தரப்பு) பல்டி அடித்த சாட்சிகளை மீண்டும்விசாரிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கருதினால் 64 பேரையும் நீதமன்றத்தில் ஆஜர்படுத்தத் தயார் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இப்போது அவர்களை கூப்பிட்டு விசாரித்து என்ன பயன்?. சாட்சிகள் மேல்சாட்சிகளை முரண்பாடகப் பேச அனுமதித்துள்ளீர்கள் என்றார்.
இதையடுத்து வழக்கில் வாதங்கள் முடிந்துவிட்டதாகக் கூறிய நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
டான்சியைத் தொடர்ந்து:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம்தேதி தள்ளிவைத்த. ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிடவில்லை.
இந் நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கிலும் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


