For Daily Alerts
Just In
நெடுமாறன் காவல் அக். 23 வரை நீட்டிப்பு
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனுடைய சிறைக் காவல் அக்டோபர் 23ம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்குஆதரவாக செயல்பட்டதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்உள்ளிட்ட 5 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெடுமாறன், சுப வீரபாண்டியன், பாவாணன், டாக்டர் தாயப்பன், ஷாகுல் அமீது ஆகிய ஐந்து பேரும் புதன்கிழமைபூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டபோதிலும் அரசு வக்கீல் ஜெயக்குமார் வரவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கைஅக்டோபர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

