திக பொது செயலாளர் பதவி: வீரமணி விலகல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வீரமணி விலகினார். அவருக்குப் பதிலாக துரை. சக்கரவர்த்தி புதியபொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
திருச்சியில் நடந்த திக மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டன. இதுவரை பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்த வீரமணி,இனி மூத்த செயற்குழு உறுப்பினராக இருப்பார்.
புதிய பொதுச் செயலாளராக துரை.சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தலைமைச் செயற்குழுவிற்கு 11உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இளைஞர்களுக்கு வழி விடும் பொருட்டே தான் பதவி விலகியதாக வீரமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications