ஜனனி, விசாரித்த போலீஸ் அனைவரும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஜனனியை 21ம் தேதி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்குநீதிபதி கற்பக விநாயகம் உத்தரவிட்டார்.

நடராஜனின் தோழியான ஜனனியும், அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் ஜனனி, ரமீஜாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

ஜனனியை நள்ளிரவில் கைது செய்தது ஏன்?, சென்னைக்கும் மதுரைக்கும் அலை கழித்தது ஏன்? ஜனனிக்குஇவ்வளவு பணம் வந்தது எப்படி? அவர் உண்மையிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினாரா?, ஜனனியின் கைதுகுறித்து ஆளுநருக்கு பேக்ஸ் அனுப்பிய கந்தசாமி என்பவர் யார்? என பல்வேறு கேள்விகளை நீதிபதிஎழுப்பினார்.

இதில் ஜனனிக்காக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடி வருகிறார். இந்த வழக்குவிசாரணை நேற்று மீண்டும் நடந்தபோது, அரசுத் தரப்பில் வழக்கறிஞர் சுப்பிரமணியம் ஆஜரானார்.

அப்போது பேசிய சுப்பிரமணியம், ஜனனி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதவே இல்லை. அவர் பொய் கூறி இருக்கிறார்என்றார்.

நீதிபதி கற்பக விநாயகம்: ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதவில்லையா? இதில் ஏன் பொய் சொன்னார்கள்? வழக்குக்கும்இந்தத் தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே.

அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம்: மதுரையில் ஜனனியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட நகைகளை பறிமுதல் செய்துநீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டோம். இந்த நகைகளை கஞ்சா விற்றுத்தான் சேர்த்து உள்ளனர். சென்னைநீலாங்கரை வீட்டில் இருந்து ரூ. 1.18 கோடியைக் கைப்பற்றினோம்.

நீதிபதி: நள்ளிரவில் கைது செய்து சென்னைக்கும், மதுரைக்கும் அலைகழித்தது ஏன் என்ற என் கேள்விக்கு பதில்என்ன?

சுப்பிரமணியம்: ஜனனியை 10ம் தேதி இரவு 8.30 மணிக்கு காரில் கைது செய்ததும் மதுரை வீட்டுக்கு அழைத்துச்சென்றோம். வீட்டில் சோதனை நடத்திய பின் கஞ்சாவைக் கைப்பற்றினோம். பின்னர் இரவில் அவர்களைஅழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்தோம்.

பின்னர் இரவே சென்னைக்கு போலீல் ஜீப்பில் அழைத்து வந்தோம். ஜனனியின் கைது தகவல் வெளியில்தெரிந்துவிட்டால் பணத்தைக் கைப்பற்ற முடியாது என்று கருதியே இரவில் சென்னைக்கு அழைத்து வந்தோம்.

நள்ளிரவில் நீலாங்கரை வீட்டை சோதனையிட்டதும் அவரை மதுரைக்கு அழைத்துச் சென்றோம். கைதான 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் தான் அவசரமாக மீண்டும் மதுரை அழைத்து வந்தோம்.

ஜனனியின் வழக்கறிஞர் கபில் சிபல்: இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துவிட்டது போலீஸ்.இதனால் அவருக்கு ஜாமீன் தரலாம். இந்த வழக்கில் போதைத் தடுப்பு சட்ட விதிகளை போலீசார்கடைபிடிக்கவில்லை. சட்டப்படி போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் வந்தால் அதை உடனே உயர்அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் வீட்டை சோதனையிட உயர் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

ஜனனிக்கு கஞ்சா கடத்த வேண்டிய அவசியமே இல்லை. மேலிடத்தின் தூண்டுதலின்பேரில் போலீசார் இந்தபோலி வழக்கை ஜனனி மீது பதிவு செய்துள்ளனர். யாரோ தூண்டி விட்டுத் தான் இது நடந்துள்ளது.

ஜனனியை 10ம் தேதி கைது செய்ததாக போலீஸ் சொல்வது தவறு. ஒரு நாள் முன்பாகவே கைது செய்துவிட்டதைபேக்ஸ் மூலம் நிரூபித்துவிட்டோம்.

நீதிபதி: ஜனனி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினாரா இல்லையா என்பது குறித்து நீதிமன்றத்துக்கு வரவழைத்துவிசாரிக்கலாமா?

கபில்சிபல்: ஜனனியை நேரில் வரவழைத்து விசாரியுங்கள்.

அரசு வழக்கறிஞர்: நீதிமன்றம் விரும்பினால் ஜனனியை நேரில் ஆஜராக வைக்கிறோம்.

நீதிபதி: ஜனனியை நள்ளிரவில் ஏன் மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தீர்கள். இந்த விஷயத்தில்உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீங்கள் (அரசுத் தரப்பு) மதிக்கவில்லை. இது போலீசார் செய்த பெரும் தவறு. யாரைக்கேட்டு இவ்வாறு செய்தீர்கள்?. மதுரை போலீஸ் கமிஷ்னருக்கு இது தெரியுமா?.

அரசு வழக்கறிஞர்: போலீஸ் கமிஷ்னர் மேற்பார்வையில் தான் இது நடந்தது.

நீதிபதி: போலீசாருக்கும் ஜனனிக்கும் ஏதவாது முன் விரோதம் இருந்ததா?. அவர் விஷயத்தில் ஏன் இவ்வளவுகடுமையாக போலீசார் நடந்து கொண்டனர் என்று எனக்குப் புரியவில்லை. இந்த வழக்கை விசாரித்த போலீசார்அனைவரும் கூண்டோடு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நினைக்கிறேன். ஜனனியிடம் போலீசார்கடுமையாக நடந்து கொண்டதன் பின்னணி என்ன என்று எனக்குத் தெரிய வேண்டும்.

வரும் 21ம் தேதி அந்த போலீசார் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். கமிஷ்னரும் ஆஜராகவேண்டும். ஜனனியையும் அந்த நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.

ஜனனியிடம் கஞ்சா எப்படி வந்தது? யார் தூண்டுததால் வழக்குப் போடப்பட்டது என்று எனக்குத் தெரியவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+