இன்று சசியுடன் சென்னை திரும்புகிறார் ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஹைதராபாத்தில் கடந்த மாதம் 27ம் தேதி முதல் தோழி சசிகலாவுடன் ஓய்வெடுத்து வந்த முதல்வர் ஜெயலலிதா இன்றிரவு சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.
தனது திராட்டை தோட்ட பண்ணை வீட்டில் தங்கியிருந்த ஜெயலலிதா 15 நாட்களுக்குப் பின் இன்று சென்னை திரும்புகிறார்.
வந்த பின் சில அமைச்சர்களின் தலை உருளும் என எதிர்பார்க்கப்படுவதால் அமைச்சர்கள் மத்தியில் கிலி பரவியுள்ளது. அதே போல அதிகாரிகள் மாற்றமும் இருக்குமாம்.
இந் நிலையில் வரும் 14ம் தேதி ஜெயலலிதா மைசூர் சென்று சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் வழிபாடு நடத்திவிட்டு அங்கிருந்து முதுமலை செல்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications