கூட்டணி வாய்ப்பு பிரகாசம்: மகிழ்ச்சியில் பா.ஜ.க.
சென்னை:
அதிமுகவுடன் பா.ஜ.க. கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக பா.ஜ.க.வின் தேசியசெயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
கூட்டணி குறித்து அதிமுக தரப்பில் இருந்து எந்தத் தகவலும் வராமல் இருந்ததால், இத்தனை நாட்களாக தமிழகபா.ஜ.க. தலைவர்கள் வாயே திறக்காமல் ஆழ்ந்த அமைதியில் இருந்து வந்தனர். எதையாவது சொல்லப் போய்அதனால் கூட்டணி வாய்ப்புக்கள் சீர்குலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் மெளனத்தில் ஆழ்ந்திருந்தனர்.
இந் நிலையில் துணைப் பிரதமர் அத்வானியின் முயற்சியால் கூட்டணி மலரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து இன்று சென்னையில் பேசிய இல.கணேசன், அதிமுகவுடன் கூட்டணிக்கான வாய்ப்புகள் பிரகாசமாகஉள்ளது. 28ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவுடன், முதல் கட்டப் பேச்சுவார்த்தையை வெங்கையா நாயுடுமேற்கொள்ளவுள்ளார். அன்றே கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
10 தொகுதிகளுக்கும் மேல் போட்டியிட பா.ஜ.க. விரும்புகிறது. இருப்பினும் இதுதொடர்பாக அதிமுகவுடன்பேசிய பிறகே இறுதி செய்யப்படும் என்றார்.
கடந்த முறை உங்கள் ஆட்சியைக் கவிழ்த்த, ஜெயலலிதா மீது பா.ஜ.கவுக்கு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டதா என்றுகேட்டபோது, எந்த தனிப்பட்ட அரசியல் கட்சி பற்றியோ, தனிப்பட்ட தலைவரின் நம்பகத்தன்மை குறித்தோபேசுவது முறையல்ல. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு கட்சியிலும் ஒவ்வொரு அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.அதை இப்போது விமர்சிப்பது சரியல்ல என்றார்.
கூட்டணி அமைக்க ஜெயலலிதா சில நிபந்தனைகள் விதித்திருக்கிறாரே என்று கேட்டபோது, நிபந்தனைகள் ஏதும்இல்லை. தமிழகத்துக்காக சில கோரிக்கைகளைத் தான் முன் வைத்தார். அதை கூட்டணிக்கனை நிபந்தனையாககூறுவது தவறு என்றார்.
தமிழகத்தில் கூட்டணிக்கு யார் தலைவர் என்று கேட்டபோது, அது கூட்டுத் தலைமையாக இருக்கும் என்றார்.
பொடாவை அதிமுக அரசு தவறாக பயன்படுத்திய விஷயத்தில் இப்போது உங்கள் நிலை என்ன என்று கேட்டதற்கு,பொடா சட்டத்தை தீவிரமாக நாங்கள் ஆதரிப்போம். அதைத் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று சொன்னோம்.அதற்காக மறு ஆய்வுக் குழு அமைத்தோம். இப்போது அந்தக் குழு அமைக்கப்பட்டதே சரியா என்பதுவிவாதத்துக்குள்ளாகிவிட்டதே என்றார்.
பா.ஜ.கவுக்கு அதிகபட்சமாக 7 இடங்கள் வரை தர அத்வானியிடம் ஜெயலலிதா ஒப்புக் கொண்டுள்ளதாக பா.ஜ.க.டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வந்தால்பா.ஜ.கவுக்கு ஒரு இடம் குறையும் என்று தெரிகிறது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications