விசா துஷ்பிரயோகம்: இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் மீது அமெரிக்க அமைப்பு கடும் குற்றச்சாட்டு
வாஷிங்டன்:
இன்போசிஸ், விப்ரோ. டிசிஎஸ் உள்ளிட்ட இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் அமெரிக்காவின் எல்-1 விசாக்களைமுறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக அந் நாட்டு தொழிலாளர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ள Department for Professional Employees,AFL-CIO அமைப்பு அமெரிக்காவின் மிகப் பெரிய தொழிலாளர் சங்கங்மாகும். இதன் செயல் இயக்குனர்மைக்கேல் கில்டே கூறுகையில்,
இதில் சில நிறுவனங்கள் எச்-1வி விசாக்களையே தவறாக பயன்படுத்தியவை. இப்போது எல்-1 விசாக்களைக்கொண்டு பார்ச்சூன்-500 பட்டியலில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களுக்கு இந்திய ஊழியர்களை பாடி ஷாப்பிங்முறையில் காண்ட்ராக்ட் பணிக்கு அனுப்பி வருகின்றன.
இந்த எல்-1 விசா, அடிப்படையில் நிர்வாகத்துறை ஊழியர்களை அமெரிக்காவுக்குக் கொண்டு வரவேஅறிமுகப்படுத்தப்பட்டது. அதுவும் அந்த நிறுவனங்களே நடத்தும் அமெரிக்க அலுவலகங்களில் பணியாற்றத்தான் இந்த விசா அறிமுகமானது.
ஆனால், இதை இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துகின்றன. இதைக் கொண்டு சாப்ட்வேர்நிபுணர்களைக் கொண்டு வந்து பிற நிறுவனங்களில் வேலை பார்க்க வைக்கின்றனர். எல்-1 விசா ஒரே நிறுவனத்தின்அமெரிக்கக் கிளைகளுக்கு ஊழியர்களை இடமாற்றம் செய்ய வசதியாகவும், எல்-2 விசா அவர்களின்குடும்பத்தாரை அமெரிக்காவுக்கு அழைத்து வரவும் தான் அறிமுகப்படுதப்பட்டது.
மேலும் இந்த விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு வருபவர்கள், நாட்டுக்குத் திரும்புவது குறித்து எந்தத் தகவலும்தர வேண்டியதில்லை. இதனால் தொடர்ந்து இங்கேயே தங்கி அமெரிக்கக் குடியுரிமை பெறவும் முயல்கின்றனர்என்றார்.
இன்போசிஸ்-விப்ரோ மறுப்பு:
அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பின் இந்த மிகக் கடுமையான குற்றச்சாட்டை இன்போசிஸ் மற்றும் விப்ரோநிறுவனங்கள் மறுத்துள்ளன.
இன்போசிஸ் நிறுவன சி.இ.ஓ. நந்தன் நிலேகனி பெங்களூரில் இன்று வெளியிட்ட அறிக்கையில், எல்-1, எச்-1விசாக்களை இன்போசிஸ் எந்தக் காலத்திலும் தவறாகப் பயன்படுத்தியதில்லை. எங்களது ஊழியர்கள்வேலையைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டாடுகள் அமெரிக்காவில் தங்கி இருந்து பணியை முடித்துவிட்டுத்திரும்பிவிடுகின்றனர் என்று கூறியுள்ளார்.
இதே போல விப்ரோ செய்தித் தொடர்பாளரும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம்










Click it and Unblock the Notifications