என்னை நேரில் சந்திக்க யாராவது தடுக்கிறார்களா? எம்எல்ஏக்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர் விஜய்!
சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் எம்எல்ஏக்களை முதலமைச்சர் விஜய் இன்று சந்தித்தார். அப்போது, தன்னை நேரில் சந்திக்க யாராவது தடுக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகியிருக்கின்றன. இந்த காலகட்டத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை கட்சி எதிர்கொண்டிருக்கிறது. இந்த விமர்சனங்கள் எல்லாம், ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக உருபெற்றிருக்கின்றன.

குறிப்பாக கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ, சர்ச்சைக்குரிய வகையில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது பெரும் பிரச்சனையாக வெடித்திருக்கிறது. இந்த நேரத்தில் எம்எல்ஏவுடன் மீட்டிங் எனில், எம்எல்ஏக்களுக்கு வார்னிங்கா? என்று கேள்வி எழுந்தது.
அதே நேரம் தவெக ஆட்சி இந்த 6 மாத காலத்தில் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகள் குறித்தும் இந்த மீட்டிங்கில் பேசப்பட்டிருக்கிறதாம். நூலகங்களில் ஏஐ புத்தகங்கள், பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க எடுக்கப்பட்ட முயற்சி, ஆந்திராவுக்கு போன கியா உதிரிபாக தொழிற்சாலை, கிளாம்பாக்கத்தில் பேருந்து பற்றாக்குறை, இன்னமும் சரியாகாத ஊழல் குற்றச்சாட்டுகள் என அரசுக்கு ஆயிரத்தி எட்டு பிரச்சனை லைனில் நிற்கிறது.
இந்த பின்னணியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரிடமும் முதல்வர் விஜய் தனித்தனியாக பேசியிருக்கிறார். இந்த உரையாடலின்போது, தன்னிடம் தொகுதி பிரச்சனை குறித்து பேச யாராவது தடுக்கிறார்களா? இந்த முறை தொகுதிக்காக நீங்கள் செய்யம் பணிகள்தான் அடுத்த முறை உங்களை வேட்பாளராக நிற்க வைக்கும். உங்களை யாராவது பணி செய்ய விடாமல் தடுக்கிறார்களா? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் தொகுதி விஷயமாக தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த சந்திப்பின்போது பட்டு வேட்டி, பட்டு சட்டை அடங்கிய தீபாவளி பரிசையும் அவர் கொடுத்திருக்கிறார். ஒருபுறம் தவெக ஆட்சியில் முதல் தீபாவளி.. இன்னொரு பக்கம் யதார்த்தத்தில் உள்ள பிரச்சனைகள் என இருபுறமும் பிரச்சனைகளும், கொண்டாட்டங்களும் இருக்கும் நேரத்தில் எம்எல்ஏக்களுடனான முதலமைச்சரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றிருந்தது.



Click it and Unblock the Notifications
