For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாய் கதை சொல்லி கிருஷ்ணகிரி மாவட்டத்தை தொடங்கி வைத்த ஜெ

By Staff
Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி:

Jaya inagurates Krishnagiri district

தர்மபுரி மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று உதயமானது. இம்மாவட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார். இதன் மூலம் தமிழக மாவட்டங்களின் எண்ணிக்கை30 ஆகியுள்ளது.

கிருஷ்ணகிரி அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் ஜெயலலிதாகிருஷ்ணகிரி மாவட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதற்காக ஹெலிகாப்டர் மூலம் அவர் இன்று பிற்பகலில்கிருஷ்ணகிரி வந்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரூ. 101 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கும் ஜெயலலிதாஅடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா தனது பேவரிட்டான பச்சை வண்ண சேலையில் வந்தார். விழாவையொட்டி நகர்முழுவதும் எங்கெங்கும் பச்சை நிறத்தில் தோரணங்கள், வரவேற்பு வளைவுகள் வைக்கப்பட்டிருந்தனர்.ஜெயலலிதாவைக் காண ஆயிரக்கணக்கான அதிமுகவினரும் பொது மக்களும் கிருஷ்ணகிரியில் கூடியிருந்தனர்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா கூறியதாவது:

கிருஷ்ணகிரி உருவாக்கப்பட்டதால் தர்மபுரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சத்தேவையில்லை. ஒரு வீட்டில் எத்தனைக் குழந்தைகள் இருந்தாலும் தாய் பேதம் பார்க்க மாட்டாள். தாயுள்ளம்படைத்த நானும் இரு மாவட்டங்களுக்கும் உரிய வகையில் உதவுவேன்.

ஒரு ஆற்றில் நிறைய வெள்ளம் போனது. அங்கு வந்த ஒரு மனிதர் ஆற்றைக் கடக்க முடியாமல் நின்றுகொண்டிருந்தார். அவர் பயந்த சுபாவம் உடையவர். அப்போது வலிமையான காளை மாடு அங்கு வந்து,ஆற்றுக்குள் குதித்து நீந்தத் தொடங்கியது.

அப்போது ஆற்றுக்குள் குதித்த சிறுவன் ஒருவன் மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டான். காளை மாடும் அந்தச்சிறுவனும் பத்திரமாய் கரையேறினார்கள்.

இதே போல ஒரு காளை மாடு நமக்கும் கிடைக்காதா என்று அந்த மனிதர் தேடினார். அப்போது ஒரு நாய் வந்தது.அதுவும் ஆற்றில் குதித்தது. உடனே அந்த மனிதரும் நாயின் வாலைப் பிடித்துக் கொண்டார். எந்த சனியனோநம்மை மூழ்கடிக்கப் பார்க்கிறது என்று நினைத்த நாய் மனிதனை கடித்தது.

இப்படி நட்டாற்றில் மனிதனுக்கும் நாய்குகம் ஜீவ மரணப் போராட்டம் நடந்தது. இறுதியில் இருவருமேவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அகப்பட்டதை துணை கொண்டால் என்றுமே ஆபத்து தான் என்பதற்கு நாய் வால் கதையே சிறந்த உதாரணம்.

இந்தக் கதை யாருக்காவது, எந்தக் கூட்டணியையாவது நினைவுபடுத்தலாம். அப்படி நினைத்து கற்பனை செய்தால்நான் பொறுப்பல்ல.

அவர்கள் மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி. எங்கும், எதிலும், எப்போதும்எனக்கு வெற்றிதான் என்றார் ஜெயலலிதா.

இந் நிகழ்ச்சிக்கு செய்தி, விளம்பரம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் அன்பழகன் நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்தார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வளர்மதி, தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சித்திக் மற்றும் தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தின் 30வது மாவட்டமான கிருஷ்ணகிரி 15.46 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டதாக இருக்கும்.மாவட்டத்தின் தலைநகராக கிருஷ்ணகிரி இருக்கும்.

இந்த மாவட்டத்தில் கீழ் தேன்கனிக்கோட்டை, ஓசூர், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை ஆகியதாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன. தளி, காவேரிப்பட்டனம், மத்தி, பர்கூர், ஊத்தங்கரை உள்ளிட்ட 10பஞ்சாயத்துக்களும் இந்த மாவட்டத்தில் அடக்கம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X