நேருக்கு நேர்: திமுக-அதிமுக 14 தொகுதிகளில் மோதல்
சென்னை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் 14 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதவுள்ளன.
மொத்தம் திமுக போட்டியிடும் 15 தொகுதிகளில் 14ல் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தப் போகிறார் முதல்வர்ஜெயலலிதா. மதிமுகவை 4 தொகுதிகளிலும் எதிர்க்கப் போகின்றனர் அதிமுக வேட்பாளர்கள்.
அதே போல காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9ல் தனது வேட்பாளர்களை நிறுத்தி மோதப் போகிறார்ஜெயலலிதா.
திமுக- அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள்:
கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, மத்திய சென்னை, தென் சென்னை, நாகப்பட்டனம், பெரம்பலூர், புதுக்கோட்டை,ராமநாதபுரம், ஸ்ரீபெரும்புதூர், தஞ்சாவூர், திருச்செந்தூர், திருச்செங்கோடு, திருப்பத்தூர்.
காங்கிரசுடன்...:
இதேபோல, அதிமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே சிவகங்கை, மயிலாடுதுறை, கோபிச்செட்டிப்பாளையம்,திண்டுக்கல், பழனி, ராசிபுரம், திருநெல்வேலி, பெரியகுளம், சேலம் ஆகிய 9 தொகுதிகளில் போட்டிஏற்பட்டுள்ளது.
பா.ம.கவுடன் 3ல் மோதல்:
அதிமுகவும், பாமகவும் செங்கல்பட்டு, அரக்கோணம், திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் நேரடியாகமோதுகின்றன.
வைகோவுக்கு எதிராகவும்...
அதே போல வைகே போட்டியிடவுள்ள சிவகாசி, திருச்சி, பொள்ளாச்சி, வந்தவாசி ஆகிய 4 தொகுதிகளிலும்அதிமுகவும், மதிமுகவும் நேரடியாக மோதவுள்ளன.
அதிமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சியும் மதுரையில் நேரடியாக சந்திக்கின்றன. தென்காசி தனி தொகுதியில்இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கும், அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவுகிறது.
வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை தனது வேட்பாளரைக் கொண்டே எதிர்க்கிறதுஅதிமுக.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications