For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரகசிய கருத்து கணிப்புகளால் காங்கிரஸ் உற்சாகம்!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இந்தியா முழுவதும் இரு சர்வதேச கருத்துக் கணிப்பு மையங்களை வைத்து காங்கிரஸ் கட்சி நடத்திய ரகசிய ஆய்வுஅந்தக் கட்சிக்கு பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது. தேசிய அளவில் அக் கட்சி அமைத்த புதிய கூட்டணிகளால்கட்சியில் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வென்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில்மட்டுமே மீண்டும் பா.ஜ.கவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என்றும், குஜராத்தில் கூட மோடிக்கு ஆதரவானஅலையில் சரிவு உண்டாகி இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த விவரம் பா.ஜ.கவையும் எட்டியதையடுத்தே துணைப் பிரதமர் அத்வானி திடீர் ரத யாத்திரையைஅறிவித்துள்ளார்.

இந்தியா ஒளிர்கிறது என்று கூறி தேர்தல் களத்தில் குதித்தது பா.ஜ.க. ஆனால், வீடு, வீடாய் தேடிப் போய் அனைத்துஎதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து கெஞ்சிக் கூத்தாடி, மாநிலத்துக்கு மாநிலம் புதிய கூட்டணிகளைஉருவாக்கிவிட்டார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இதை பா.ஜ.க. சற்றும் எதிர்பார்க்கவில்லை.

தமிழகத்தில் வலுவான எதிர்க் கட்சிக் கூட்டணியில் காங்கிரசை நுழைத்த சோனியா, ஆந்திராவில் தெலுங்கானாதனி மாநிலம் கோரி வரும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.கவுக்கும் அம் மாநிலமுதல்வர் நாயுடுவுக்கும் அதிர்ச்சி தந்தார்.

தெலுங்கான தனி மாநிலம் கோரி மறைந்த சென்னாரெட்டி 1970களில் பெரும் போராட்டம் நடத்தினார். அப்போதுதெலுங்கானா கட்சி 10 எம்.பி. தொகுதிகளில் வென்றது. இப்போதும் அதே போன்ற போராட்டம் உச்சகட்டத்தில்உள்ளது. இந்தக் கோரிக்கைக்கு நக்சலைட்டுகளும் ஆதரவாக உள்ளனர்.

மேலும் பா.ஜ.கவும் தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. ஆனால் நாயுடுவின் எதிர்ப்பால்அடக்கி வாசித்தது. இந் நிலையில் தனி மாநிலம் கோரும் அமைப்புடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததால்பா.ஜ.க.-தெலுங்கு தேசம் கூட்டணிக்கு தெலுங்கானா பகுதியில் பெரும் அடி விழும் என்று தெரியவந்துள்ளது.இங்கு 107 சட்டமன்றத் தொகுதிகளும் 16 எம்.பி தொகுதிகளும் உள்ளன.

50 எம்.பிக்கள் கொண்ட பிகாரில் பரம விரோதிகளான லாலு பிரசாத் யாதவையும் ராம் விலாஸ் பாஸ்வானையும்கைகோர்க்க வைத்த சோனியா அவர்களுடன் காங்கிரஸ் கூட்டணியை அமைத்துவிட்டார். பாஸ்வானும் லாலுவும்சேருவார்கள் என்பதையும் பா.ஜ.க. எதிர்பார்க்கவில்லை.

தென் மாநிலங்களில் பா.ஜ.க. கூட்டணியை ஆந்திராவில் நாயுடு மட்டுமே கொஞ்சம் காப்பாற்றுவார் என்றுகருதப்படுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் நல்ல வலுவுடன் உள்ளதாகவும் கேரளத்தில் காங்கிரசுக்கு படுதோல்விஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால், கேரளாவில் இடதுசாரிக் கட்சிகள் தான் வெல்லும் என்பதால்அவர்கள் பெறப் போகும் எம்.பி சீட்கள், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவே உதவும்.

70 எம்.பிக்கள் கொண்ட மாபெரும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் முலாயமும், மாயாவதியும் யாருடனும் கூட்டுசேராமல் தனித்தனியே நின்றால் அவர்கள் வென்றது போக மிச்ச மீதியைத் தான் பா.ஜ.கவும் காங்கிரசும் வெல்லமுடியும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் எப்படியாவது மாயாவதியை கூட்டணிக்குள் இழுக்க காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது.காங்கிரசுக்கு முஸ்லீம்களின் ஆதரவு பல மடங்கு அதிகரித்துள்ளதால், மாயாவதியின் தலித் ஓட்டுக்களையும்வைத்து இருவருமே வெல்ல முடியும் என்று கருதப்படுகிறது.

ஒரிஸ்ஸாவில் பா.ஜ.கவுடன் உள்ள நவீன் பட்நாயக்கின் கட்சிக்கு வலு குறைந்துள்ளதாகவும், காங்கிரஸ் அங்குவெல்லும் என்றும் தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளை இப்போதைக்கு அசைக்க முடியாதுஎன்றும் ஆய்வுகள் கூறியுள்ளன.

ஹரியாணாவில் பா.ஜ.கவுடன் இனியும் இருந்தால் தோல்வியே என்பதால் ஓம் பிரகாஷ் செளதாலாவின் கட்சிகூட்டணியில் இருந்து விலகி தனியே நிற்கிறது. இதனால் அங்கு பா.ஜ.கவுக்கு இம்முறை தோல்வியே கிடைக்கும்என்றும் பஞ்சாபில் காங்கிரஸ் வெல்லும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மராட்டியத்தில் சரத்பவாருடன் கூட்டணி அமைத்ததால் பா.ஜ.க.-சிவசேனை கூட்டணியை காங்கிரஸ்சமாளித்துவிடும் என்றும் ரகசிய கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

பெரிய மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் தவிர வேறெங்குமே பா.ஜ.கவுக்கு வெற்றிஉறுதியில்லை என்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

மக்களவையை மத்திய அரசு கலைத்தபோது பா.ஜ.க. மட்டுமே தெளிவாக இருந்தது. எதிர்க் கட்சிகள் ஒன்று சேரஅவகாசமே கொடுக்காமல் உடனடியாகத் தேர்தல் நடத்தும் திட்டத்துடன் இந்தியா ஒளிர்கிறது என்று கூறிக்கொண்டு பா.ஜ.க. களத்தில் குதித்தது.

ஆனால், கடந்த ஒரு மாதத்தில் நடந்த கூட்டணித் திருப்பங்கள் தங்களது வெற்றி அவ்வளவு எளிதானதல்லஎன்பதை அக் கட்சிக்கு உணரச் செய்துள்ளது.

இந்தியா ஒளிர்கிறது என்ற பா.ஜ.கவின் கோஷத்துக்கு மேல் நடுத்தர மக்களிடையே வரவேற்பு இருந்தாலும்,பெரும்பாலான ஓட்டுக்களைக் கொண்ட கிராமப்புறங்களில் இந்த கோஷத்துக்கு மதிப்பே இல்லை என்றும்ஆய்வுகள் கூறுகின்றன. கிராமப் பகுதி வாக்குகள் காங்கிரசுக்கே ஆதரவாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

வேலை வாய்ப்பில்லாத லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் இந்தியா ஒளிர்கிறது கோஷம் எரிச்சலைஉண்டாக்கியிருப்பதாகவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனால் வேலை வாய்ப்பு மற்றும் கிராமப்பொருளாதார மேம்பாடு ஆகியவற்றையே காங்கிரஸ் முன்னிருத்திப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அந்த இருஅமைப்புகளும் பரிந்துரைத்துள்ளன.

இவற்றை முன்னிருத்தி காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே சாலை வழியே கிராமம், கிராமமாக சென்று பிரச்சாரத்தை ஆரம்பித்தார்சோனியா.

கருத்துக் கணிப்பு ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டதைப் போலவே சோனியாவுக்கு கிராமப் பகுதிகளில் பெரும்கூட்டமும் கூடுகிறது.

ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள்சொல்லவதால் காங்கிரஸ் தலைவர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகளால் பா.ஜ.கவிடம் பதற்றம் பரவியுள்ளது. மீண்டும் ஏதாவது தடாலடி செய்தால் மட்டுமேநிலைமையை சமாளிக்க முடியும் என்பதாலேயே ரதத்தைக் கிளப்பியுள்ளார் அத்வானி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X