எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை: கமல்ஹாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசியல் சாயம் பூசிக் கொள்ள நான் விரும்பவில்லை. எந்தக் கட்சியையும் நான் ஆதரிக்க மாட்டேன் என்றுகமல்ஹாசன் கூறியுள்ளார்.

பல்வேறு வட நாட்டு நடிகர், நடிகைகளை கட்சிக்குள் இழுத்து வரும் பா.ஜ.கவும் காங்கிரசும் தென்னகத்திலும்அந்த முயற்சியில் இறங்கியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை ரஜினியையும் கமலையும் தங்கள் அணிக்குஆதரவாக பிரச்சாரத்தில் இழுக்க அவை முயல்கின்றன.

இந் நிலையில் கமல் தனது நிலை விளக்கியுள்ளார்.

விருமாண்டி படத்தின் 50-வது நாளை முன்னிட்டு 1,000 ஏழைச் சிறுவர், சிறுமியருக்கு உடைகள், புத்தகங்கள்கமல்ஹாசன் நற்பணி மன்றத்தால் வழங்கப்பட்டது. கமல்ஹாசனின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் இந்நிகழ்ச்சி நடந்தது.

அப்போது குழந்தைகளுக்காக எழுதப்பட்ட நிலவறை உலகம் என்ற புத்தகத்தையும் கமல் வெளியிட்டார். பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

தமிழை மறக்க ஆரம்பித்துவிட்டோம். தேங்க்ஸ் என்ற ஆங்கில வார்த்தை தமிழை விட அதிக பாப்புலராகி விட்டது. பஸ், கிஸ் என்றெல்லாம் கூட நாம் பேசுவதை சாதாரணமாக ஆக்கி விட்டோம். தமிழை மதிக்க வேண்டும், போற்றவேண்டும்.

விருமாண்டி படத்தை வெள்ளைக்காரர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். ஜல்லிக்கட்டுக் காட்சியை அவர்கள்மிகவும் ரசித்தார்கள். படத்தில் ஒரு பிரச்சினையும் இல்லையே என்றும் கூறினார்கள். அவர்களுக்கும் கூட இங்கேநடந்த விவகாரம் தெரிந்திருக்கிறது.

எனது அடுத்த படம் கிருஷ்ண லீலா. இந்தப் பெயரை மாற்றவும் வாய்ப்புள்ளது. இது குழந்தைகளுக்கான படம்.இதில் ஆபாசம், வன்முறை, செக்ஸ் என எதுவும் இருக்காது. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவுள்ளோம்.நானும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறேன்.

20 ஆண்டுகளாக எனது ரசிகர்கள் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார்கள். இது அரசியல் கலப்பில்லாதசுத்தமான நற்பணி. அரசியல்வாதிகள் நமக்கு ஒத்து வர மாட்டார்கள். எனக்கு அரசியல் சாயம் பூசிக் கொள்ளத்தெரியாது.

எந்தக் கட்சிக்காகவும், அரசியல்வாதிக்கும் ஆதரவாக நான் பிரசாரம் செய்ய மாட்டேன். அதற்கென்று பல நடிகர்,நடிகைகள் உள்ளனர். நான் கொஞ்சம் வித்தியாசமானவன். நமக்கு அரசியல் சரிப்பட்டு வராது.

சினிமாவுக்கு நிறைய இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். இளைஞர்கள் நிறைய பேர் சினிமாவுக்கு வர வேண்டும்.என்னையும்,ரஜினியையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இளைஞர்கள் எழுந்து வர வேண்டும், நிச்சயம் வருவார்கள்என்றார் கமல்.

அதே நேரத்தில் என்னை யாரும் பிரசாரத்திற்கு கூப்பிடவும் இல்லை, கூப்பிடவும் மாட்டார்கள். அரசியல் என்றகடலில் நீந்தும் அளவுக்கு நான் பலமானவன் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிருஷ்ண லீலா படத்திற்கு வைத்துள்ள தாடி, மீசையுடன் புதிய கெட்டப்பில் தற்போது கமல் காணப்படுகிறார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற