For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை தொடங்குகிறது அத்வானியின் ரத யாத்திரை

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி & கோவை:

துணைப் பிரதமர் அத்வானி கன்னியாகுமரியில் நாளை தனது ரத யாத்திரையைத் தொடங்குகிறார். இதையடுத்துகன்னியாகுமரியிலும் தமிழகத்தில் நாளை அவர் பயணம் செய்யும் பாதைகளிலும் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

இந்தியா ஒளிர்கிறது என்ற இந்த யாத்திரை 33 நாட்கள் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. பா.ஜ.க. தலைவர்வெங்கைய்யா நாயுடு கொடியசைத்து யாத்திரையைத் தொடக்கி வைக்கிறார். பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லிஉள்ளிட்ட பா.ஜ.கவின் முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

முதல் கட்ட யாத்திரையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப்பில் பிரச்சாரம் செய்கிறார். தினமும் சராசரியாக 200 கி.மீ. தூரம் வீதம்4,000 கி.மீ. தூரம் பிரச்சாரம் செய்கிறார்.

மார்ச் 26ம் தேதி பஞ்சாப் அமிர்தசரஸில் பிரதமர் வாஜ்பாயுடன் அத்வானி பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில்கலந்து கொள்கிறார். அதனுடன் முதல் கட்ட யாத்திரை முடிகிறது.

நான்கு ஓய்வுக்குப் பின் மார்ச் 30ம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் இரண்டாம் கட்ட யாத்திரையைத்தொடங்கி, ஏப்ரல் 14ம் தேதி ஒரிஸ்ஸா மாநிலம பூரியில் நிறைவு செய்கிறார் அத்வானி.

நான்கு நாள் ஓய்வின்போது குஜராத் காந்திநகர் தொகுதியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.மொத்தத்தில் 8,000 கி.மீ தூரம் ரத யாத்திரை மேற்கொள்கிறார் அத்வானி.

அத்வானி மேற்கொள்ளவிருக்கும் மூன்றாவது ரத யாத்திரை இதுவாகும். 1990ம் ஆண்டுபிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கியஅப்போதையே பிரதமர் வி.பி.சிங்கின் ஆட்சியைக் கவிழ்க்க, அத்வானி மேற்கொண்ட சோம்நாத்-அயோத்தியாரத யாத்திரை மத்தியில் ஆட்சியைக் கலைத்ததோடு, பின்னர் பாபர் மசூதி இடிப்பதற்கும் அடிகோலியது.

1997ல் இந்திய சுதந்திரப் பொன் விழாவை முன்னிட்டு ஸ்வர்ண ஜெயந்தி ரத யாத்திரையை மேற்கொண்டார்.அத்வானி ரத யாத்திரை மேற்கொண்ட போதெல்லாம் பா.ஜ.க அடுத்த வந்த தேர்தல்களில் வெற்றியைக் குவித்தது.இப்போதும் அத்தகைய சாதகமான அலையை ஏற்படுத்த அத்வானி ரத யாத்திரையை மேற்கொள்கிறார்.

இந்த ரத யாத்திரை மதக் கலவரத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை நிராகரித்த அத்வானி,பா.ஜ.கவின் கொள்கைகளை முன்வைத்து நான் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. தேசிய ஜனநாயகக்கூட்டணியின் செயல் திட்டத்தையே நான் பேசப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

யாத்திரையையொட்டி பல்வேறு ஏற்பாடுகளும்,பலத்த பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.யாத்திரைக்காக நவீன வசதிகளுடன் கூடிய மினி பஸ் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகையான விஜயசாந்தி, தானும் அத்வானியின் யாத்திரையில்கலந்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கும் யாத்திரையில் பங்கேற்பதற்காகஅங்கு செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் பா.ஜ.க. மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்யவுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர சிஷ்யை விஜயசாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயசாந்தியை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தானும்அத்வானியின் ரத யாத்திரையில் கலந்து கொள்ள கன்னியாகுமரி செல்வதாக அறிவித்துள்ளார்.

கோவையில் பலத்த பாதுகாப்பு:

அத்வானியின் ரதயாத்திரை நாளை மறுநாள் கோவையை வந்தடைகிறது. இதனையொட்டி கோவை நகரில்பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா செய்தியாளர்களிடம்தெரிவித்தார்.

கோவையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முன்பொரு முறை அத்வானி வந்தபோது அவர் மீதுவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதும், அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X