For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசபக்தியும் இல்லை, பதிபக்தியும் இல்லை: சோனியா மீது ஜெ. கடும் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சோனியா காந்திக்கு தேசபக்தியும் இல்லை, பதிபக்தியும் இல்லை என்று சோனியா காந்தி குறித்து ஜெயலலிதாகடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் முதல்வர் ஜெயலலிதா. மெரீனாகடற்கரையோரம் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகம் அருகே பிரச்சாரத்தைத் தொடங்கியஜெயலலிதா அங்கு பேசுகையில் சோனியா காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அதன் பின்னர் ஜெயலலிதாவின் வேன் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியது. அங்கிருந்து நொச்சிக் குப்பம்,அடையாறு மத்ய கைலாஷ் சந்திப்பு, கிண்டி ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ஜெயலலிதா அதிமுகவினர் உற்சாகவரவேற்பு அளித்து வழியனுப்பி வைத்தனர். தென் சென்னையில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் பாதர்சையத், மத்திய சென்னையில் போட்டியிடும் பாலகங்கா ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தின்போதுஉடனிருந்தனர்.

பின்னர் பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு வழியாக இரவு அவர் மதுராந்தகம் சென்றடைந்தார். அங்கு நடந்தபொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் ஜெயலலிதா பேசினார்.

சென்னையில் பேசியது போலவே, மதுராந்தகத்திலும் ஜெயலலிதா சோனியாவைக் கடுமையாக விமர்சித்தார்.அதிமுகவினரே அதிரும் வகையில் அவரது பேச்சு மிகக் காட்டமாக இருந்தது. ஜெயலலிதா பேசுகையில், சோனியாகாந்தி அன்னிய நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரிடம் தேச பக்தியை நாம் எதிர்பார்க்க முடியாது. சரி,பதிபக்தியையாவது எதிர்பார்க்கலாம் என்றால் அதுவும் அவரிடம் இல்லை.

கணவரின் நினைவுகளுக்கு விசுவாசமாக இல்லாத ஒருவரால், எப்படி அந்த கணவருக்குச் சொந்தமான நாட்டுக்குவிசுவசாமாக இருக்க முடியும்?

திமுக, பா.ம.க., மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டது தொடர்பாக தொடர்ந்து பொய்யானகாரணங்களைக் கூறி வருகிறார் சோனியா. ஜெயின் கமிஷனின் இறுதி அறிக்கையில், ராஜீவ் காந்தி கொலையில்திமுகவுக்குத் தொடர்பு இல்லை என்று கூறி விட்டதாக சோனியா கூறுகிறார்.

ஆனால் ஜெயின் கமிஷன் இறுதி அறிக்கையின் இரண்டாவது இணைப்பில், விடுதலைப் புலிகளின் தலைவர்பிரபாகரன், கிட்டு போன்றோருடன் கருணாநிதி போன்ற தலைவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்துக்கூறப்பட்டுள்ளது. மேலும், ராஜீவ் கொலை தொடர்பாக கருணாநிதியிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லைஎன்றும் கேட்கப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வற்புறுத்தலின்பேரில், தமிழகத்தில் உள்ளஅரசியல்வாதிகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க கண்காணிப்புக் குழுவைமத்திய அரசு அமைத்தது. அந்த குழுவின் விசாரணை இன்னும் கூட முடிவடையவில்லை. இந் நிலையில் திமுகசுத்தமான கட்சி என்று எப்படி சோனியா முடிவெடுத்தார்? எந்த இந்தியப் பெண்ணாவது இப்படி தனது கணவரின்நினைவுகளுக்குத் துரோகம் இழைப்பார்களா?

சோனியா காந்தி ஒரு அரைவேக்காடு, அரசியல் கத்துக் குட்டி. நமது நாட்டை வளப்படுத்த அவரைப் போன்றஒருவர் வேண்டுமா? அல்லது அனுபவம் வாய்ந்த, திறமையான, கொள்கைவாதியான வாஜ்பாய் வேண்டுமா?மண்ணின் மைந்தரா அல்லது இத்தாலிய இறக்குமதியா? யார் வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யட்டும்என்றார் ஜெயலலிதா.

சோனியா காந்தி மட்டுமல்லாது, தமிழக அரசியல் தலைவர்களும் ஜெயலலிதாவின் கடுமையான பேச்சிலிருந்துதப்பவில்லை. வைகோவை காலி பெருங்காய டப்பா என்றும், வாய்ச் சவடால் வைகோ என்றும் விமர்சித்தஜெயலலிதா, ராமதாஸையும் விடவில்லை. ஜாதி வெறியர், அடிக்கடி கட்சி தாவும் மனப் போக்கு கொண்டவர்என்று கடுமையாக விமர்சித்தார்.

கருணாநிதி குறித்து ஜெயலலிதா கூறுகையில், தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கிடைத்து விடக் கூடாது என்பதில்,கர்நாடகத்தை விட மிக மிக ஆர்வமாக இருந்தவர் கருணாநிதி. தமிழக வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு அனுமதிகிடைக்காமல் தனது கட்சியின் மத்திய அமைச்சர்களான டி.ஆர்.பாலு, முரசொலி மாறன் மூலமாக தொடர்ந்துஇடைஞ்சல் செய்தவர் என்று கடுமையாக விமர்சித்தார்.

இன்று செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து வாலாஜாபாத், கீழ்ஒட்டிவாக்கம்,திம்மராஜன்பேட்டை, கருக்குப்பேட்டை, அய்யன்பேட்டை, காஞ்சிபுரம், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை,ஆற்காடு உள்ளிட்ட இடங்களில் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தைத் தொடர்கிறார்.

ஜெ. பிரச்சாரத்தில் விதிமீறல்கள்

முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சாரத்தை தொடங்கியதையொட்டி அதிமுகவினர் செய்திருந்த ஏற்பாடுகளில்தேர்தல் நடத்தை விதி மீறல்கள் அதிகமாகவே காணப்பட்டன.

கடற்கரைச் சாலையான காமராஜர் சாலை முழுவதிலும் அதிமுக, பா.ஜ.க. கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அதேபோலவிளக்குக் கம்பங்களில் குழாய் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு விளக்குக் கம்பத்திலும் இரண்டுகுழாய் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டிருந்தன.

தேர்தல் பிரசாரத்தின்போது குழாய் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் கமிஷன் ஏற்கனவேதடை விதித்துள்ளது. ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவேதீர்ப்பளித்துள்ளது.

இதை மீறும் வகையில் நூற்றுக்கணக்கான குழாய் ஒலிபெருக்கிகள் நேற்று கடலையை மிரட்டும் வகையில் அலறிக்கொண்டிருந்தன.

அதேபோல, கடற்கரைச் சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் பொதுக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளைநடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அந்த தடையுத்தரவு ஜெயலலிதாவுக்காக தளர்த்தப்பட்டது.

அதிமுகவினர் பிரமாண்டமான அளவில் ஏற்பாடுகள் செய்திருந்தாலும் கூட பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை.இருப்பினும் திமுகவின் கோட்டையான சென்னையில் இத்தனை அதிமுகவினர் வந்ததே பெரிதுதான் என்ற ரீதியில்கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமடைந்த ஜெயலலிதா அவர்களை குஷிப்படுத்தவேனுக்குள்ளிருந்தவாறே கையசைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X