For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலவீனத்தை பலமாக்கிய பா.ஜ.க !

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிதம்பரம், தர்மபுரி, வட சென்னை தொகுதிகளில் போட்டியிட சரியான வேட்பாளர்கள் இல்லால் தட்டுத்தடுமாறிய பாரதீய ஜனதாக் கட்சி இப்போது வட சென்னை தவிர மற்ற இரண்டிலும் வலுவான வேட்பாளர்களைஅறிவித்து எதிர்க்கட்சிகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாரதீய ஜனதாக் கட்சி வட சென்னை, புதுவை, தர்மபுரி, சிதம்பரம், கோவை,நாகர்கோவில், நீலகிரி ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில் கோவை, நாகர்கோவில், நீலகிரி ஆகிய தொகுதிகளில் ஏற்கனவே போட்டியிட்டவர்களுக்கே மீண்டும் சீட்கொடுக்கப்பட்டுள்ளது. சி.பி.ராதாகிருஷ்ணன் (கோவை), பொன் ராதாகிருஷ்ணன் (நாகர்கோவில்), மாஸ்டர்மாதன் (நீலகிரி) ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். பாண்டிச்சேரியில் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசரின் எதிர்ப்பையும் மீறி டெல்லி பா.ஜ.க. தலைவர்களின் ஆதரவுடன் சீட்டைப் பிடித்துவிட்டார்லலிதா குமாரமங்கலம்.

மற்ற 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்த ஆள் கிடைக்கவில்லை. இதனால் பா.ஜ.க. தரப்பில் பெரும்குழப்பம் நிலவுயது.

தொகுதியை மாற்றித் தர முடியுமா என்று அதிமுகவிடம் கட்சித் தலைவர் வெங்கையாைவை விட்டும் அத்வானிமூலமாகவும் கெஞ்சிப் பார்த்தது பா.ஜ.க. ஆனால் முதல்வர் ஜெயலலிதா முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டதால், வேறு வழியின்றி வேட்பாளர்களுக்காக தீவிர வேட்டை தொடங்கியது.

தங்களது கட்சிக்குள் இருந்துதான் வேட்பாளரை அறிவிக்க வேண்டுமா, தொகுதியில் பிரபலமானவரைவேட்பாளராக போடக் கூடாதா என்று நினைத்த பா.ஜ.க. தற்போது ஹெவி வெயிட் வேட்பாளர்களைக்கண்டுபிடித்து அறிவித்துள்ளது.

பா.ம.கவில் டிக்கெட் கேட்டு கிடைக்காத அதிருப்தியில் இருந்து வந்த பு.தா.இளங்கோவனை பா.ஜ.க. வளைத்துவிட்டது. அவரை தர்மபுரியில் நிறுத்தியுள்ளது. பு.தா.இளங்கோவனுக்கு தர்மபுரி தொகுதியில் நல்ல ஓட்டுவங்கியும், செல்வாக்கும் உள்ளது. பா.ம.கவின் ஆரம்ப கால தொண்டர். கட்சியின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர். வன்னிய இனத்தைச் சேர்ந்தவர்.

முன்பு மத்திய அமைச்சர் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவிருந்தபோது, ராமதாஸ் தலையிட்டு ஏ.கே.மூர்த்திக்கு அந்தவாய்ப்பைக் கொடுத்தார். அன்று முதல் ராமதாஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் பு.தா. இளங்கோவன்.இந்த முறை எம்.பி.சீட்டாவது கொடுப்பார்கள் என்று காத்திருந்தபோது, ராமதாஸின் மகன் அன்புமணியின் நண்பர்டாக்டர் செந்திலுக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதனால் கொதித்தெழுந்தார் இளங்கோவன்.

தர்மபுரி தொகுதியில் பா.ஜ.கவை ஒரு போட்டியாகவே கூற முடியாத நிலை முன்பு இருந்தது. இப்போதுபு.தா.இளங்கோவனை எதிர்த்து பா.ம.க. கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல, சிதம்பரம் தொகுதியிலும் வலுவான பா.ம.க. வேட்பாளர் பொன்னுச்சாமியை எதிர்த்துப் போட்டியிடபா.ஜ.கவுக்கு ஆள் கிடைக்காமல் இருந்து வந்தது. முன்னாள் மாநிலத் தலைவர் கிருபாநிதி போட்டியிடலாம் என்றுமுதலில் கூறப்பட்டது. ஆனால் அவருக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இதனால் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிலிருந்து சமீபத்தில் பிரிந்து பா.ஜ.கவில் இணைந்த தடாபெரியசாமிக்கு சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. தலித்களின் சார்பில் பல போராட்டங்கள் நடத்திய தடாபெரியசாமிக்கு தொகுதியில் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. அத்தோடு, காஞ்சி மடத்தின் அன்பையும்,ஆதரவையும் பெற்றவர் இவர். ஜெயேந்திரருடன் நல்ல தொடர்பு உள்ளது. மடத்தின் உதவியுடன் தான் சீட்டையும்வாங்கியுள்ளார்.

சிதம்பரத்தில் தடா பெரியசாமி, கடும் போட்டியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமாவளவன்,பொன்னுச்சாமிக்கு இடையேதான் கடும் போட்டி நிலவும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்ட நிலை மாறி தற்போதுதடா பெரியசாமியும் போட்டியில் குதித்துள்ளதால் சிதம்பரம் தொகுதி பரபரப்பாகி உள்ளது.

வட சென்னையைப் பொருத்தவரை திமுகவின் வெற்றி உறுதியான ஒன்று என்ற நிலை இருந்தபோதிலும், தற்போதுஅங்கு சுகுமாறன் நம்பியார் போட்டியிடுவதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் நெருங்கியநண்பரான சுகுமாறன் நம்பியாருக்கு எந்த அளவுக்கு ஆதரவு உண்டு என்று தெரியவில்லை.

இவருக்காக திருச்சி கேட்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா தர மறுத்ததால் போட்டி போடவே போவதில்லை என்றநிலையில் இருந்தார் நம்பியார். இந் நிலையில் வட சென்னைக்கு சரியான ஆள் இல்லாததால் இவரைநிறுத்தியுள்ளது பா.ஜ.க. மேலும் இவர் ஜெயலலிதாவின் நண்பர் என்பதால் அதிமுகவினரை விட்டு எப்படியாவதுவெற்றி பெறச் செய்வார் முதல்வர் என்று பா.ஜ.க. நம்புகிறது.

வட சென்னையில் நாடார் சமுதாயத்தினரின் ஓட்டுக்கள்தான் அதிகம். மலையாள பிராமணரான சுகுமாறன்நம்பியார் இந்த ஓட்டுக்களை எப்படிக் கவரப் போகிறார் என்று தெரியவில்லை. வட சென்னை மாவட்டச்செயலாளர் பாலகங்காவை மத்திய சென்னையில் ஜெயலலிதா நிறுத்தியுள்ளார். பாலகங்காவும் மலையாளி தான்.இதனால் சுகுமாறனுக்காக பாலகங்காவும் கடுமையாக உழைப்பார் என்று தெரிகிறது.

மேலும் சுகுமாறனுக்காக ஜெயலலிதா சிறப்பு கவனம் எடுத்துப் பிரச்சாரம் செய்யலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், தனது பலவீனத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சாதுரியமாக செயல்பட்டு முக்கிய வேட்பாளர்களாககளத்தில் நிறுத்தி எதிர்க்கட்சிகளுக்கு பலத்த சவாலை ஏற்படுத்தி விட்டது பா.ஜ.க.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X